Browsing: கோவை

தமிழகத்திற்கும் டெல்லிக்குமான இந்தப் போரில் ‘தமிழ்நாடு அணி’ வெல்ல வேண்டும் என கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி கிறிஸ்தவ தேவாலயத்தில் ஆதரவு திரட்டிப் பேசினார்.

கோவையில் மதுபோதையில் தென்னை மட்டையுடன் நடுரோட்டில் கிரிக்கெட் விளையாடி வாகனங்களை வழிமறித்த நபரின் வினோத வீடியோ இணையத்தில் வைரலாகி சிரிப்பலைகளை ஏற்படுத்தி வருகிறது.

கோவை வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை அக்கட்சி வேட்பாளர்கள் சந்திக்காமல் புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோவையில் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் உள்கட்சி பூசல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

2026 தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் செந்தில்பாலாஜி மற்றும் அம்மன் அர்ஜுனன் இடையே நிலவும் கடும் போட்டி மற்றும் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த நேரடி ரிப்போர்ட்.

பொள்ளாச்சியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி, பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு பலூனை கூடுதல் ஆட்சியர் பறக்கவிட்டார். மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனம் மற்றும் இருசக்கர வாகன ஊர்வலமும் நடைபெற்றது.

கோவை காந்திபுரம் சிவா டெக்ஸ்டைல்ஸ் ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரால் கோபி, திருப்பூர் உள்ளிட்ட கிளைகளிலும் சோதனை நீடிக்கிறது.

கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.க மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்கிடையே பலப்பரீட்சை உறுதியாகியுள்ளது.

கோவை ஆவாரம்பாளையத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களைத் தட்டிக்கேட்ட நபர் தாக்கப்பட்ட அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது. போலீசார் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

கோவையில் வெயில் 40°C-ஐத் தாண்டியுள்ளது. ஏப்ரல் 12 வரை வெப்ப அலை நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் மதியம் 12 முதல் 4 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மலுமிச்சம்பட்டியில் வீடு புகுந்து இளைஞர்களைத் தாக்கிய ரவுடி கும்பல், போலீசாரையே கலாய்த்த ஆடியோ மற்றும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.