Author: Prime Reporter
நடிகர் விஜய் தீவிர அரசியலில் குதித்துள்ள நிலையில், ஜனநாயகன் படம் தான் தனது கடைசி படம் என கூறியுள்ளார். ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர், அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் முதல் 2 பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், 3வது சிங்கிள் இன்று மாலை வெளியாக உள்ளது. அதே சமயம் ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மலேசியாவில் நாளை 27ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு அந்நாட்டு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், ரசிகர்கள் மலேசியா செல்ல ஆயத்தாமாகியுள்ளனர். Thalapathy Fans take over MALAYSIA 😎🔥#JanaNayaganAudioLaunch pic.twitter.com/fmvb1AMt0K— Harish N S (@Harish_NS149) December 26, 2025 இந்நிலையில் மலேசியா செல்ல விஜய் ரசிகர்கள் பன்னாட்டு விமான நிலையங்களில் காலை முதலே திரண்டுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் இன்று காலை நடிகர் விஜய் மலேசியா புறப்பட வருகை…
கோவை, காந்திபுரம் இரண்டாவது வீதியில் உள்ள ராஜேஸ்வரி மேன்சன் என்ற ஆண்கள் தங்கும் விடுதியில் அதே பகுதியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயின்று வரும் மாணவர் ரமணன் என்பவர் அங்கு தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் ரமணன் அறை கதவு திறந்து இருந்த நிலையில், ஆழ்ந்த உறக்கத்தில் உறங்கிக் கொண்டு இருந்தார். அப்பொழுது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் ரமணன் தங்கியிருந்த அறைக்குச் சென்று அவர் பையுடன் இருந்த லேப்டாப் எடுத்துச் சென்றார். கண் விழித்து எழுந்த ரமணன் தனது லேப்டாப் உடன் இருந்த பையை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம், பக்கம் இருந்த அறைகளில் முழுவதும் தேடிய பின்னர் தனியார் தங்கும் விடுதி உரிமையாளரிடம் கூறி உள்ளார். அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது மர்ம நபர் ஒருவர் உள்ளே சென்று பையை…
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் 101-ஆவது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார். நல்லாட்சி தினத்தை முன்னிட்டு, சமூகத்தில் சிறப்பாக பணியாற்றிய 6 அற்புத நபர்களுக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளதாக கூறினார். கிறிஸ்துமஸ் விழா இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டதாகவும், ஆனால் சில இடங்களில் கிறிஸ்துமஸ் விழா தடுத்து நிறுத்தப்பட்டதும், அடித்து உடைக்கும் சம்பவங்களும் நடந்தது துரதிஷ்டவசமானது என்றும் தெரிவித்தார். இத்தகைய நிகழ்வுகள் விரும்பத்தகாதவை என்றும், இதை கண்டிப்பதோடு மட்டும் அல்லாமல், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முழு உரிமையுடன் கொண்டாட கிறிஸ்துவ நண்பர்களுக்கு உரிமை உள்ளது; இதனை மற்றவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். பல பிஷப்புகள் நேரடியாக பிரதமரை சந்தித்து பேசிவருவதாகவும்…
படிப்பிடிப்பின் போது நடந்த விபத்தில் காயமடைந்து நடக்க முடியாமல் வீல் சேரில் வந்த பிரபல நடிகருக்கு திரையுலகத்தினர் ஆறுதல் கூறி வருகின்றனர். ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்தவர் நடிகர் விநாயகன். சர்ச்சைக்கு பெயர் போன விநாயகன், தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். ஜெயிலர் படத்தில் இறந்து போன் விநாயகன், 2ஆம் பாகத்தில் எப்படி திரும்பி வருகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் மலையாளத்தல் ஆடு 3 என்ற படத்தில் நடித்து வரும் விநாயகன், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், கழுத்தை அசைக்க முடியாமல் வீல் சேரில் வலம் வந்தார். கழுத்து, தோள்பட்டை பலத்த அடி ஏற்பட்டுள்ளதாகவும், நரம்பு பாதித்துள்ளதாகவும், விட்டிருந்தால் முடங்கி போயிருப்பேன் என விநாயகன் கூறினார். மருத்துவர்கள் 6 வாரம் ஓய்வு எடுக்க கூறியுள்ளதால் தற்போது படப்பிடிப்புக்கு செல்ல முடியவில்லை என்றும் கூறினார்
கோவை அத்திப்பாளையம் பகுதியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த பிதான் என்பவர் வசித்து வந்தார். இவர் பிளம்பர் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஜிண்டி என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தை உள்ளது. பிதானுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்து வந்ததால் அடிக்கடி குடும்பத்தனிரிடையே சண்டை ஏற்பட்டது. இதனால் தனது குழந்தையை பெற்றோரிடம் கொடுத்துவிட்டு, பிதானுடன் இணைந்து வசித்து வந்த ஜிண்டி பணிக்கு சென்று வந்திருந்தார். ஆனால் தனது பழக்கத்தை மாற்றிக் கொள்ளாமல் கணவர் பிதான் இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்னை அதிகரித்தது. ஆனால் பிதான் மது அருந்திக் கொண்டு வீட்டுக்கு வந்து பிரச்சனை செய்தார். ஒரு கட்டத்தில் பணிக்கு செல்லாமல், வீட்டிலேயே முடங்கி கிடந்தார். இந்த சூழலில், ஜிண்டி வேலைக்கு சென்ற நேரத்தில் வேறு ஒரு பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்து பிதான் உல்லாசமாக இருந்துள்ளார். திடீரென வீட்டுக்கு வந்த ஜிண்டி, கணவர் கோலத்தை பார்த்து ஆத்திரத்தில் சண்டை போட்டுள்ளார்.…
திருப்பூர் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஊத்துக்குளி தாலுகா முரட்டு பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளியம்பாளையம் பகுதியில் கைவிடப்பட்ட பாறை குழியில் இன்று மாநகராட்சி 10க்கும் மேற்பட்ட லாரிகளில் குப்பை கொட்ட வந்ததால் லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊத்துக்குளி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 20 க்கும் மேற்பட்ட வரை கைது செய்தனர். தகவல் அறிந்த அதிமுக பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் மேலும் குப்பை கொண்டுவந்த லாரிகளை சிறை பிடித்து சம்பவ பொதுமக்களுடன் இணைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் பெருந்துறை அதிமுக பொறுப்பாளர் தோப்பு வெங்கடாசலம் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பகுதியில் குப்பை கொட்ட மாட்டோம் என அதிகாரிகள்,மாநகராட்சி காவல்துறை அதிகாரிகள் முன்கூட்டியே கடிதம் தந்துள்ளது. தற்போது இந்த பகுதியில் கொட்ட கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் காலை கைது செய்தவர்களை உடனடியாக…
சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ள விஜய், தீவிர அரசியலில் குதித்துள்ளார். இதனால் தமது முழு கவனமும் இனி அரசியலில் தான் என ஏற்கனவே கூறியிருந்த அவர், தான் நடிக்கும் ஜனநாயகன் படம் தான் கடைசி என கூறியிருந்தார். இந்த படம் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாக உள்ளது. பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், நரேன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஹெச் வினோத் இயக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் தளபதி கச்சேரி மற்றும் ஒரு பேரே வரலாறு ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் மூன்றாவது பாடலாக செல்ல மகளே என்ற பாடல் நாளை வெளியாகும் என படக்குழு போஸ்டருடன் வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த பாடலை விஜய் பாடியுள்ளார். ஏற்கனவே தளபதி கச்சேரி பாடலை விஜய் பாடியுள்ள நிலையில் ஒரே படத்தில் 2 பாடல்களை விஜய் பாடியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்திற்கான தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் பட்டியலை விஜய் நேற்று முன்தினம் வெளியிட்டிருந்தார். அப்போது முதல் விரக்தியில் இருந்தார் அம்மாவட்ட முக்கிய நிர்வாகியாக பார்க்கப்பட்ட அஜிதா ஆக்னல். ஆனால் அந்த பதவிக்கு சாமுவேல்ராஜ் நியமனம் செய்யப்படுவதை அறிந்து பனையூர் த.வெ.க. தலைமை அலுவலகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன் கட்சி அலுவலகம் வந்த விஜய் காரை தனது ஆதரவாளர்களுடன் மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாவலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் போராட்டக்காரர்களை விலக்கி விஜய் காரை தலைமை அலுவலகத்திற்குள் அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து அஜிதா ஆக்னல் கட்சி அலுவலகத்தின் நுழைவு வாயிலில் தர்ணா போராட்டம் நடத்தினார். தொடர்ந்து த.வெ.க. நிர்வாகிகள் அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் அஜிதா ஆக்னல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த நிலையில் அளவுக்கு அதிகமாக தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடல்நிலை மோசமானால் தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவையில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம் – புகைப்படங்கள் கோவையின் பல்வேறு தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, கோவையின் பல்வேறு தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெற்றன. டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் தேவாலயத்தில் இயேசு கிறிஸ்து அவதரித்த மாட்டுத் தொழுவம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலும், கண்கவர் வண்ண விளக்குகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் ஆக்வினஸ் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் குழந்தை இயேசு உருவபொம்மையை பக்தர்களுக்கு உயர்த்திக் காட்டி இயேசு பிறப்பை அறிவித்தார். பின்னர் அந்த உருவபொம்மை குடிலில் வைக்கப்பட்டு ஆராதனைகள் மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இந்த நிகழ்வில் கிறிஸ்துவர்கள் மட்டுமின்றி, பிற மதங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். . உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ…
உள்நாட்டுப் பறவைகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இடம்பெயரும் பறவைகள் என இருவகைப் பறவைகளுக்கும் தமிழ்நாடு ஒரு முக்கியமான பல்லுயிர் வளமிக்க மாநிலமாக திகழ்கிறது. இதன் காரணமாக, பறவைகள் பாதுகாப்பு மற்றும் அவற்றின் எண்ணிக்கை, இனப்பல்வகை ஆகியவற்றை கண்காணிப்பது மிக முக்கியமான பணியாக விளங்குகிறது. இந்த நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு பல்வேறு முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, இராட்சிப் பறவைகள் (Hornbill) பாதுகாப்பு மையம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், உயர்நிலை வனஉயிரின பாதுகாப்பு நிறுவனத்தில் (AIWC) செயல்படும் வேட்டையாடும் பறவைகள் (Raptor) ஆராய்ச்சி மையம், சர்வதேச பறவைகள் பாதுகாப்பு மையம், மரக்காணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. பறவைகளின் எண்ணிக்கை மற்றும் இனப்பல்வகை நிலவரத்தை துல்லியமாக அறிய மாநில அளவிலான கணக்கெடுப்பு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 2025–2026 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பை இரண்டு கட்டங்களாக நடத்த தமிழ்நாடு வனத்துறை திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக,…
