Author: Prime Reporter
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திமுக மகளிர் மேற்கு மண்டல அணி சார்பில் நடைபெறும் வெல்லும் தமிழ் பெண்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். கோவை வந்த முதல்வருக்கு கோவை மாவட்ட ஆட்சியர் கோவை மாநகர காவல் ஆணையர் கோவை மாநகர காவல் கண்காணிப்பாளர் கோவை மேற்கு மண்டல ஐஜி மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை சார்ந்த திமுக நிர்வாகிகள் மட்டுமின்றி மேற்கு மண்டல திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை விமான நிலையத்தில் வரவேற்றனர். கோவை விமான நிலையத்திலிருந்து அவிநாசி சாலை வரை சளைகளில் இரு புறமும் தொண்டர்கள் மற்றும் மக்களும் தமிழக முதல்வருக்கு மேளதளங்களுடன் உற்சாக வரையிற்பனைக்கப்பட்டது. இன்று மாலை பல்லடத்தில் நடைபெறும் மேற்கு மண்டல மகளிர் மாநாட்டில் முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொள்ள…
கரூர் குளித்தலை அருகே கழுவூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் இருசக்கர வாகனத்தில் சுற்றிக்கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காணாமல்போன மகளை பெற்றோர் தேடி வந்த நிலையில், அந்த நபர் சிறுமியை அதே பகுதிக்கு அழைத்து வந்து விட்டுச் செல்ல முயன்றுள்ளார். இதைக் கவனித்த பொதுமக்கள், அவரை பிடித்து தாக்கி காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது உறுதி செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து, குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அப்பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரியும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை விமான நிலையத்தில் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பு அப்பொழுது பேசிய அவர், இப்போது அலை மோதுகின்ற கூட்டம் 1972ல் புரட்சித் தலைவரை பார்த்தது போல 1988 இல் அம்மாவை பார்த்தது போல இன்னொரு மாற்றம் தமிழ்நாட்டில் உருவாகியிருக்கிறது இந்த மாற்றம் எதிர்காலத்தில் தமிழகத்தின் வரலாற்றில் அவர் தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஆக அமருவதை மக்கள் சக்தியோடு இணைந்து அந்த பணிகள் நிறைவேறும் என்பதை வாழ்த்துக்களோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பல இடங்களில் இந்த கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகிறது இதுவரையிலும் அந்த கருத்துக்களை பொருத்தவரையில் என்னை போன்றவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை. ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு கருத்துக்களை சொல்லுகிறார்கள் அப்படி என்றால் நாங்கள் சொல்ல வேண்டுமென்றால் இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுத்த சீமான் அங்கே விருந்து உண்டு விட்டு பரிசு பொருட்களை வாங்கி வந்த காலம் இருக்கிறது. அதை மறந்து விடக்கூடாது. காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் கருத்து இன்னமும் எங்களின்…
விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் ஜனநாயகன். விஜய் சினிமா கேரியரில் கடைசி படம் என்பதால், மலேசியா கோலாலம்பூரில் பிரம்மாண்டமாக ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. இந்த நிகழ்வு முடிந்ததும், விஜய் மலேசியாவில் இருந்து சென்னை புறப்பட்டார். சென்னை ஏர்போர்ட் வந்ததும், அவரை காண கூட்டம் திரண்டது. விஜய்யை வரவேற்க, தவெக தொண்டர்கள், ரசிகர்கள் திரண்டனர். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த விஜய் தனது காரை நோக்கி புறப்பட்ட போது, ரசிகர்கள் அவரை காண முட்டி மோதினர். கூட்ட நெரிசலில் ரசிகர்கள் முண்டியடித்ததால், தனது கார் அருகே விஜய் வரும் போது கூட்டம் நெருங்கி வர ஒருவர் மீது ஒருவர் விழுந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சிக்கி விஜய்யும் தடுமாறி கீழே விழுந்தார். இதையடுத்து பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக தாங்கி பிடித்து காரில் ஏற்றினர். இதையடுத்து அவரின் கார் மீது மற்றொரு காரும் மோதியதால் விபத்து ஏற்பட்டது.…
“ஏதோ ‘Open Challenge’ என்று சொன்னீர்களே…பல ஆண்டுகளாக உங்களுக்கு நான் வைத்த ஒரு ஓபன் சேலஞ்ச் இன்னும் Pending-ல்தான் இருக்கிறது.என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? அஇஅதிமுக ஆட்சி குறித்து நீங்கள் என்ன கேட்டாலும், அதற்கு நான் பதில் சொல்லத் தயார்.ஆனால், திமுக ஆட்சி குறித்து நான் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லத் தயாரா?” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த சவாலுக்கு,அஇஅதிமுக பொதுச் செயலாளர் (EPS) கடுமையான பதிலடி அளித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி கே.பழனிசாமி“அஇஅதிமுக ஆட்சிக்கால சாதனைகள் மக்கள் அனைவருக்கும் தெரியும்.அதனால் எங்களுக்கு எந்தவித பயமும் இல்லை.ஆனால் திமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள்,சட்டம் – ஒழுங்கு சீர்கேடு,விலை உயர்வு,மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்துமுதல்வர் நேரடியாக மேடையில் வந்து பதில் சொல்லத் தயாரா?”என்று கேள்வி எழுப்பினார். மேலும்,“முதல்வர் உண்மையிலேயே துணிச்சலுடன் இருந்தால்,வெறும் பேச்சு சவாலாக இல்லாமல்,நேருக்கு நேர் பொதுமக்கள் முன் விவாதத்திற்கு வர வேண்டும்.அதிமுக ஆட்சியின்…
ஆண்களுக்கு பெண் நிகர் என்பது இன்றைய அறிவியல் காலத்தில் சாத்தியமாகி வருகிறது. ஒரு பக்கம் ஆண்கள் கோலோச்சிய பல்வேறு துறைகளில் பெண்கள் பல சாதனைகளை புரிந்து வருகின்றனர்.அதே சமயம் ஆண், பெண் இருபாலினருக்கும் சளைக்காமல் போட்டி போட்டு வருகின்றனர் மூன்றாம் பாலினத்தவர்கள். இந்தியாவின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளராக இருப்பவர் கோவையை சேர்ந்த பத்மினி பிரகாஷ். வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களை தாண்டி பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து தன்னுடன் படித்தவரை தனது வாழ்க்கை துணையாக தேடிக் கொண்டவர் பத்மினி பிரகாஷ். ஒட்டுமொத்த மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குபவர் பத்மினி பிரகாஷ். இவருக்கு உறுதுணையாக இருந்தவர் இவர் கணவர் பிரகாஷ். கணவர், மகன் என அழகான குடும்பத்துடன் கோவையில் வசித்து வரும் பத்மினி, படிப்பை முடித்துவிட்டு தன்னுடைய கேரியரை வீணாக்காமல், தனியார் செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக நுழைந்தார். இந்தியாவில் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளராக வலம் வந்த அவர், தமிழ் துறையில்…
ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் 3 பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் இன்று மலேசியாவில் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக தொடங்கியது. Vaanga na!!!🔥#JanaNayagan pic.twitter.com/E6bTdipZ1F— Christopher Kanagaraj (@Chrissuccess) December 27, 2025 நிகழ்ச்சி தொடங்கும் முன்பே திடீர் மழை பெய்ததால், விஐபி சீட்டில் அமர்நதவர்களுக்கு ரெயின் கோட் வழங்கப்பட்டது. விஜய்யின் கடைசி படம் என்பதால் பல ரசிகர்கள் மலேசியா புறப்பட்டு வந்துள்ளதால் ஒரு லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. Finallyyy rio raj hosting Begins 🥳🔥 #JanaNayaganAudioLanuch pic.twitter.com/Ld8neJAps2— Dharshini S (@Dharshini_tvk) December 27, 2025 விஜய் கோட் சூட்டுடன், கையில் காப்புடன் வந்த காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. மேலும் நிகழ்ச்சியை நடிகரும், VJ ரியோ தொகுத்து வழங்கிய வீடியோவும் இணையத்தில்…
கோவை அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓரைக்கால்பாளையம், அன்வில் ஆட்டோமேசன் கம்பெனி குடியிருப்பு வளாகம் பகுதியில், 25.12.2025 அன்று 5 வயது சிறுவனை கடத்தி, பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் தொடர்பாக,அன்னூர் காவல் நிலைய குற்ற எண் 635/2025, பிரிவுகள் 140 மற்றும் 303(2) BNS கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்வழக்கில் புகார்தாரர் இம்ரான் @ அம்ததுல் இஸ்லாம் (29) என்பவர், தமது 5 வயது மகன் காணாமல் போனதாகவும், வீட்டில் வைத்திருந்த VIVO செல்போன் (மதிப்பு ரூ.10,000/-) திருடிச் செல்லப்பட்டதாகவும், குற்றவாளிகள் தங்களிடம் வரவேண்டிய சம்பளப் பணம் ரூ.1,80,000/- வழங்காவிட்டால் குழந்தையை கொன்று விடுவோம் என தொலைபேசி மூலம் மிரட்டியதாகவும் புகார் அளித்தார். மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அன்வில் ஆட்டோமேசன் கம்பெனியில் முன்பு பணிபுரிந்த அன்வர் அலி (18) மற்றும் இளஞ்சிறார் ஒருவர் ஆகியோர், சம்பளப் பணம் தொடர்பான முன்விரோதம் காரணமாக குழந்தையை கடத்தி, புகார்தாரரின் செல்போனை திருடிச்…
தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு தனி ரசிகர்கள் படையே உண்டு, முக்கியமாக இல்லத்தரசிகள் தங்கள் வேலைகளை சீரியல்களை பார்த்துக் கொண்டே செய்கின்றனர். ஒவ்வொரு சேனல்களிலும் புத்தம் புது சீரியல்களை களமிறக்கி பெண்களை இழுக்கின்றனர். சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என சீரியல்களுக்கு பஞ்சமே இல்லாமல், சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் கூட சீரியல்களை ஒளிபரப்புகின்றனர். அப்படி இந்த வாரம் முதல் 10 இடங்களை பிடித்த சீரியல்களின் பட்டியலை பார்க்கலாம். இந்த வாரம் முதல் இடத்தை பிடித்துள்ளது மூன்று முடிச்சு சீரியல். சன்டிவியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு 10.34 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. இரண்டாவது இடத்தில் சிங்கப்பெண்ணே, 9.89 டிஆர்பி ரேட்டிங்குடன் பயணிக்கிறது. 3வது இடம் கயல் சீரியல் 9.07 டிஆர்பி ரேட்டிங், 4வது இடம் மருமகள் 8.67 டிஆர்பியுடனும், 5வது இடத்தில் எதிர்நீச்சல் சீரியல் 8.57 டிஆர்பி ரேட்டிங்குடன் இடம்பிடித்துள்ளது. முதல் 5 இடங்களை சன்டிவி சீரியல்களே பிடித்துள்ளது. 6வது…
கோவையில் நடந்த சாலை விபத்தில் கணவன் கண்முன்னே மனைவியின் உயிர் பிரிந்தது. விபத்தின் நெஞ்சை பத, பதைக்க வைக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான கோரகாட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை NH சாலை மரக்கடை பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக். இவர் தனது மனைவி ராபியத்துல் பஷிரியாவுடன் நேற்று மாலை கோவை பாலக்காடு சாலை சுண்ணாம்புகாளவாய் வழியாக குனியமுத்தூரை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக பயணிகளை ஏற்றி மதுக்கரை நோக்கி அதிவேகமாக சென்ற கோகுலம் என்ற தனியார் பேருந்து, இருசக்கர வாகணத்தின் பக்கவாட்டில் மோதியதில் கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த ராபியத்துள் பஷிரியாவின் தலையில் ஏறியது. இதில் இருசக்கர வாகனத்தை ஒட்டிவந்த கணவர் முகமது ரபீக் கண்முன்னே மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். இதில் படுகாயம் அடைந்த முகமது ரபீக் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். கோவையில் அதிவேகமாக இயங்கும் தனியார் பேருந்துகளால் இதுபோன்ற…
