Author: Prime Reporter
இணையத்தில் வைரலாகும் பேட்டியில் மகளை பற்றி நடிகர் ஜிதன் ரமேஷ் பகிர்ந்த உருக்கமான தகவல்கள் ரசிகர்களை நெகிழச்செய்தது.
கடந்த 2023ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை, திமுக ஊழல் பட்டியல் அடங்கிய திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் திமுக அமைச்சர்களின் சொத்து விபரங்களை வெளியிட்டார். அதில் திமுக எம்பி டிஆர் பாலு, அவரது மகனும் அமைச்சருமான டிஆர்பி ராஜா உட்பட அவரது குடும்பத்தினரக்கு 21 நிறுவனங்கள் சொந்தமாக உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். இதை எதிர்த்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் டிஆர் பாலு அண்ணாமலை மீது அவதூறு வழக்கு போட்டார். இந்த வழக்கில் 21 நிறுவனங்கள், சொத்துக்கள் தொடர்பாக அண்ணாமலையிடம் குறுக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி செந்தில் குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, அண்ணாமலை மற்றும் டிஆர் பாலு ஆஜராகியிருந்தனர். கடந்த 2014ஆம் ஆண்டு, கப்பல் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த போது டி ஆர் பாலு 10 கப்பல்களை சொந்தமாக வாங்கியதாக மு.க அழகிரி கரத்து தெரிவித்தார், அது குறித்து செய்தித்தாள்கிளில் ஞாபகம்…
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், சமீபத்தில் பேட்டியில், நடிகை திரிஷாவிடம் இருந்து விஜய் முதலில் வெளியே வர வேண்டும் என பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசியல் கட்சி தலைவர்கள் பலர் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே நடிகர் திரிஷாவும் கண்டனம் தெரிவித்துள்ளார். திரிஷா தனது வழக்கறிஞர் மூலம் அறிக்கை ஒன்றை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், அரசியலில் நான் நடுநிலையான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறேன். உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்கள் நிதானமாக பொறுப்புடன் பேச வேண்டும், தனிப்பட்ட வாழ்க்கை பொது விவாதத்திற்கு உரியது இல்லை. நான் திரைக்கலைஞர் என்பதை மட்டுமே அடையாளப்படுத்த விரும்புகிறேன், அவமரியாதையை ஒரு போதும் ஏற்க முடியாது. இப்படி ஒரு அருவருக்கத்தக்க கருத்தை நான் எதிர்பார்க்கவில்லை, எனக்கு தொடர்பில்லாத விஷயங்களில் எனது பெயரை பயன்படுத்தக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
இசையமைப்பாளரை மணந்த ரோஷினி ஹரிப்ரியன் திருமண புகைப்படங்கள் வைரல்; ரசிகர்கள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது சமூக வலைதளங்களில்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், விஜய் கூட்டத்தில் ஏற்படும் மரண நிகழ்வுகள் குறித்து பேசியிருந்தார். அதில், கூட்டத்தில் இறப்பு நேர்ந்தால் நல்ல சகுனம் தானே என விஜய்யின் ஒவ்வொரு கூட்டத்திலும் மரணம் நிகழ்வது நல்ல சகுனம் தான் என கூறினார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தவெக கொள்ளை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், அரசியலில் புதிய பாய்ச்சலை நிகழ்த்தி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சியைக் கண்டு அஞ்சும் சக்திகள், இன்று தங்களின் மனிதாபிமானமற்ற முகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அறிவாலய கொத்தடிமை ஊதுகுழலாகவே மாறிவிட்ட கமலாலய கள்ளக்கூட்டணி தலைவருக்கு கண்டனம். ஒருவர் உயிரிழந்த நிகழ்வு”நல்ல சகுனம்” என்று கேலி செய்துள்ள பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் பேச்சு அடிப்படை மனிதாபிமானம் அற்றது. அரசியல் நாகரிகம் என்பது எதிரிகளுக்கும் பொதுவானது. ஆனால், அதிகார மமதையில் இருப்பவர்களுக்கும், தங்களை அறிவாலயத்தின் “கொத்தடிமை ஊதுகுழலாக” மாற்றிக்கொண்டு செயல்படும் கமலாலயத்தின் “கள்ளக்கூட்டணி” தலைவர்களுக்கும்…
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டம், காசாக்குடிமேடு, கிளிஞ்சல்மேடு கிராமங்களைச் சேர்ந்த 25 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. அத்துடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இந்த அடாத செயல், அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் 25 பேரையும் உடனடியாக விடுவித்து, அவர்களது படகுகளையும் மீட்டுத் தர ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில், இலங்கை நீதிமன்றத்தால் கடந்த 3ஆம் தேதி விடுவிக்கப்பட்ட பிறகும் தமிழ்நாட்டு மீனவர்கள் 9 பேர், சொந்த ஊருக்குத் திரும்ப முடியவில்லை. அவர்கள் அங்கே பரிதவித்து வருவதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளது வேதனை அளிக்கிறது. மேலும் தமிழக மீனவர்கள் 3 பேர், இலங்கை நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையைச் செலுத்த முடியாமல் சிறையில் வாடுகின்றனர். மீனவர்களுக்குத் தொடர்ந்து இதுபோல நிகழ்வதைத் தடுக்க, தமிழக அரசு உருப்படியான எந்த…
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 2 மாதங்களில் நடைபெற உள்ளன. தமிழக அரசியல் கட்சிகள் இதற்காக படு தீவிரமாக பயணியாற்றி வருகிறது. திமுக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பல்வேறு வியூகங்களை அமைத்து வருகிறது. மறுபக்கம் அதிமுக கூட்டணி இந்த முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜகவுடன் கூடட்ணி அமைத்துள்ளது. அதிமுக பொறுத்தவரை பாஜக, அமமுக, அன்புமணியின் பாமக உட்பட ஏராளமான கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது. திமுக கூட்டணி இதுவரை உடையாமல் அப்படியே உள்ளது. இதனிடையே நாம் தமிழர் கட்சி, தவெக கட்சி தனியாக தேர்தலை சந்திக்க உள்ளது. ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த தேமுதிக, இதுவரை சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என அறிவிக்கவில்லை. இந்த நிலையில் கோவை ஈஷா யோகா மையத்தில் நேற்று நடந்த மகா சிவராத்திரி விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்,…
கர்நாடகாவில் உள்ள பிரபல ஐயப்பன் சுவாமி கோவில்கள், வழிபாட்டு நேரங்கள் மற்றும் சிறப்பு திருவிழாக்கள் பற்றிய முழு தகவல்கள் இங்கே.
காரம் நிறைந்த சில்லி எக் போண்டா ரெசிபி வைரல்; வீட்டிலேயே எளிதாக செய்யும் முறையும் சுவை ரகசியமும் அறிந்துகொள்ளுங்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதிய 2 மணி நேரத்தில் திமுகவில் இணைந்துள்ளார் முன்னாள் அமைச்சர். அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது. இதனிடையே அவர் திமுகவில் இணைவார் என்ற பேச்சும் கிளம்பியது. அதன்படி, எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள விலகல் கடிதத்தில், தான் நீண்ட காலமாக கழகத்தில் பயணித்து வந்ததாகவும், தற்போது சொந்த சூழ்நிலை காரணமாக கழக பணிகளில் ஈடுபட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தான் விலகுவதாகவும், தனது ராஜினாமா மற்றும் விலகல் கடிதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார். விலகல் கடிதம் கொடுத்ததும், இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த திமுக மாநாட்டில் பங்கேற்ற நிலோபர் கபில், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.
