Close Menu
    What's Hot

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»தப்பித் தவறிக்கூட தயிரோடு இந்த உணவுகள சேர்த்து சாப்பிடாதீங்க… ரொம்ப டேஞ்சர்…!
    ஆரோக்கியம்

    தப்பித் தவறிக்கூட தயிரோடு இந்த உணவுகள சேர்த்து சாப்பிடாதீங்க… ரொம்ப டேஞ்சர்…!

    Prime ReporterBy Prime ReporterFebruary 14, 2026Updated:February 14, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Curd UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    எந்த பொருட்களுடன் தயிர் சேர்த்து சாப்பிடக்கூடாது என்பதை பற்றி விரிவாக இங்கே காண்போம்.

    Table of Contents

    • வெங்காயம்
    • மாம்பழம்
    • மீன்
    • பால்
    • உளுந்தம் பருப்பு
    • ​எண்ணெய் நிறைந்த உணவுகள்

    பல உணவுப் பொருட்கள் இருந்தாலும், சில உணவுகளுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிடும் போது ஒவ்வாமையை ஏற்படுத்தும். தயிர் இயற்கையாகவே அதிக சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருளாக இருந்தாலும், இதனுடன் குறிப்பிட்ட சில உணவு வகைகளை சேர்த்து சாப்பிடும் பொழுது நமக்கு நன்மைகளை விட பக்க விளைவுகளே அதிகமாக ஏற்படுகின்றன.

    Curd UTV

    தயிரில் இயற்கையாகவே அதிக சத்துக்கள் நிறைந்த கால்சியம் வைட்டமின் பி2 வைட்டமின் பி12 மெக்னீசியம் பொட்டாசியம் உள்ளிட்டவைகள் தயிரில் மிக அதிக அளவில் உள்ளன. தயிர் எளிதில் செரிமானம் அடையக்கூடிய உணவுப் பொருள்.

    தயிரில் பல நல்ல குணாதிசயங்கள் இருந்தாலும், தயிருடன் சில குறிப்பிட்ட உணவுப் பொருட்களை கலந்து சாப்பிட்டால் அது நம் உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தி அஜீரண கோளாறுகளை உண்டாக்கிவிடும் என்பது மறுக்க முடியாத உண்மை. தயிரையே நமது உடலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் மாற்றக்கூடிய அந்த குறிப்பிட்ட உணவு வகைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த கட்டுரை விரிவாக காண்போம்.

    வெங்காயம்

    Curd UTV

    உங்களுக்கு தயிர் வெங்காயம் சாப்பிடும் பழக்கம் இருந்தால், மாற்றிக் கொள்வது நல்லது. ஏனெனில் தயிர் என்பது இயற்கையிலே நமது உடலுக்கு குளிர்ச்சி தன்மையை அளிக்க வல்லது. வெங்காயம் நமது உடலுக்கு வெப்பத்தை அளிக்கக்கூடியது. வெங்காயம் தயிர் இரண்டும் கலந்த கலவையை நாம் அதிகமாக விரும்பி சாப்பிடும் பட்சத்தில் அது தோல் அலர்ஜியை ஏற்படுத்தி உடல் அரிப்பு சொரியாசிஸ் போன்ற குறைபாடுகளை நமது உடலில் ஏற்படுத்திவிடும்.

    மாம்பழம்

    mangoes-and-curd-UTV

    தயிருடன் மாம்பழங்களை கலந்து சாப்பிட்டால் தேவாமிர்தம் போல் இருக்கும். வெங்காயத்தைப் போன்றே மாம்பழமும் நமது உடலில் வெப்பத்தை அதிகரிக்க வல்லது. தயிருடன் மாம்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தோல் சம்பந்தமான நோய்கள் உடலின் செயல்பாட்டை தடைபடுத்தி பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

    மீன்

    fish curd Utv

    தயிர் என்பது புரோட்டின் அதிகம் உள்ள விலங்கு வகை புரத உணவுப் பொருள். அதேபோல், மீனிலும் அதிக புரதம் உள்ளது. இதுவும் விலங்கு வகை புரதம். எப்போதும், ஒரு விலங்கு வகை புரதத்துடன் இன்னொரு விலங்கு வகை புரதத்தை அல்லது தாவர வகைத்துடன் இன்னொரு தாவர வகை புரதத்தை சேர்த்து சாப்பிட்டால், நமது உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

    தயிருடன் மீன் சேர்த்து சாப்பிட்டால் அஜீரண கோளாறு ஏற்படுவதுவுடன் வயிறு தொடர்பான உபாதைகளும் ஏற்படும்.

    பால்

    curd-vs-milk-UTV

    பால் மற்றும் தயிர் மாடுகளில் இருந்து பெறப்படுவது. இவை இரண்டும் விலங்கு வகை புரதத்தை தன்னகத்தை கொண்டுள்ளது. பால் மற்றும் தயிரை சேர்த்து சாப்பிடும்பொழுது வயிற்றுப்போக்கு உப்புசம் மற்றும் வாய்வு கோளாறு உள்ளிட்டவைகள் ஏற்பட காரணமாக அமைந்துவிடும்.

    உளுந்தம் பருப்பு

    ural dal UTV

    தயிருடன் உளுந்தம் பருப்பினால் செய்த உணவுகளை சாப்பிட்டு வந்தால், அது செரிமானத்தில் பிரச்சனை உருவாக்கி இறுதியில் வயிற்று உப்புசம் மற்றும் வயிற்று கோளாறு, வயிறு வீக்கம், வயிற்றுப்போக்கு அல்லது பேதி போன்ற மோசமான நிலைக்கு உங்களை கொண்டு சென்று விடும்

    ​எண்ணெய் நிறைந்த உணவுகள்

    fry dish UTv

    ​எண்ணெய் நிறைந்த உணவுகளான புரோட்டா, மைதா, பொரித்த உணவுகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அந்த அளவுக்கு அதன் சுவையும் வாசனையும் நம்மை கட்டி போட்டு வைத்துள்ளது என்றே சொல்லலாம். எண்ணை மிகுந்த உணவுகளுடன் புரதம் நிறைந்த தயிர் சேர்த்து சாப்பிடும் பொழுது, அந்த உணவு செரிமானத்தை தாமதப்படுத்துவது மட்டுமில்லாமல் நம்மை விரைவில் சோர்வு அடைய செய்து விடுகிறது. இதன் காரணமாகவே எண்ணெய் நிறைந்த உணவு பொருட்களை சாப்பிட்ட பிறகு வெகுவிரைவில் உறக்கம் வந்துவிடும்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

    Avoid foods with curd Curd food combinations Food combination side effects Healthy eating tips Tamil உடல் நல குறிப்புகள் செரிமான பிரச்சனை தயிருடன் தவிர்க்க வேண்டிய உணவுகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    August 4, 2026

    மிஸ் பண்ணிடாதீங்க.. தினம் ஒரு கொய்யாப்பழம்.. சருமப் பொலிவு முதல் கண் பார்வை வரை..!

    August 3, 2026

    ஈறுகளில் இரத்தம் வருகிறதா?.. நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்..!

    August 1, 2026

    இரவு 8 மணிக்கு மேல் இந்த 6 தப்பு பண்ணாதீங்க.. அதிர்ச்சித் தகவல்கள்..!

    July 29, 2026

    உடலுக்குக் குளிர்ச்சி தரும் அற்புதப் பழம்.. கருப்பை ஆரோக்கியத்தைக் காக்கும் இயற்கை உணவு..!

    July 28, 2026

    தூக்கம் வரவில்லையா?.. உங்களின் தூக்கக் சுழற்சியைப் பாதிக்கும் ஆபத்துகள்..!

    July 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026
    Don't Miss

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026

    தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.2,132 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.