இயக்குநர் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் லைகா தயாரிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான ‘சிக்மா’ திரைப்படம் சினிமா வட்டாரத்தில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. தந்தை விஜய் அரசியலில் முழுமையாக ஈடுபட்டுள்ள சூழலில், அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈர்த்தது. படத்தில் மேக்கிங் நன்றாக இருந்தாலும் கதை மற்றும் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம் என்ற விமர்சனங்கள் எழுந்தாலும், படம் ஓரளவுக்கு வசூலைக் குவித்து வருகிறது.
இதனிடையே, படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வுகளில் கலந்துகொள்ளாத சங்கீதா, படம் வெளிய인தான முதல் நாளன்று தனது மகள் திவ்யா சாஷாவுடன் சென்னை கமலா திரையரங்கிற்கு வருகை தந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். தியேட்டரில் நுழைந்த அவரைப் பார்த்த ரசிகர்கள் “அண்ணி, அண்ணி” என்று ஆரவாரத்தோடு வரவேற்றனர்.
ரசிகர்களை விசிலடித்து நாசமாக்காதீங்க.. நடிகர்களை விளாசிய ப்ளூ சட்டை மாறன்..!
இது குறித்துப் பேசிய கமலா தியேட்டர் நிர்வாக இயக்குநர் விஷ்ணு கமல், “9 மணி காட்சிக்கு அவர்கள் இருவரும் 8:18 மணிக்கே வந்துவிட்டார்கள். படம் தொடங்குவதற்கு முன்பு ஜேசன் சஞ்சய் குறித்த ஸ்பெஷல் மாஷ் அப் வீடியோவை திரையிட்டோம். அதைப் பார்த்த அவர்கள் எங்களிடம், ‘என்ன இப்படி ஷாக் கொடுத்துட்டீங்க?’ என்று மகிழ்ச்சியுடன் கேட்டனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்தச் சுவாரஸ்யமான தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

