தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்து ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து, கோலிவுட் திரையுலகில் பல முன்னணி நடிகர்களின் பார்வை அரசியல் பக்கம் திரும்பியுள்ளது.
விஜய்யின் வெற்றியைத் தூண்டுகோலாகக் கொண்டு, சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் ராகவா லாரன்ஸ் போன்ற நடிகர்களும் தங்களது ரசிகர்களைத் தொடர்ச்சியாகச் சந்தித்துப் பேசி வருவதுடன், தங்களது மக்கள் இயக்கங்களையும் தீவிரப்படுத்தி வருகின்றனர். இது வரவிருக்கும் காலங்களில் தமிழ் சினிமாவில் அரசியல் வருகைகள் அதிகரிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிக்மா 3 நாள் வசூல் நிலவரம்.. முதல் 3 நாட்களில் இத்தனை கோடியா?..
இந்நிலையில், நடிகர்களின் இந்தத் திடீர் அரசியல் நகார்களைச் சுட்டிக்காட்டி பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் பெரும் தீயாய் பரவி வருகிறது. தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “சூர்யா, தனுஷ் உள்ளிட்ட நடிகர்களின் ரசிகர் மன்ற சந்திப்புகள் அனைத்தும் ஒரு வகையான ‘கிரிஞ்ச்’ காமெடியாகவே இருக்கின்றன.
இவர்களின் திரைப்படங்களும் கூட தரமானதாக இல்லாமல் மொக்கையாகத்தான் வருகின்றன. ரசிகர்கள் தங்களது பொன்னான நேரத்தை வீணடிக்காமல், நல்ல படங்களை மட்டும் பார்த்துவிட்டு தங்களது வேலையைப் பார்க்கச் செல்லுங்கள்; விசிலடித்து நாசமாகிவிடாதீர்கள்” என்று காரசாரமாக எச்சரித்துள்ளார். நடிகர்களின் அரசியல் வருகையும், அதற்கு எதிராக எழும் விமர்சனங்களும் தற்போது தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக மாறி உள்ளன.

