தமிழ்நாட்டில் பெண்களின் திருமணத்திற்கு வலு சேர்க்கும் விதமாகத் தவெக அரசின் மிக முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான ‘அண்ணன் சீர்’ திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. தமிழகப் பாரம்பரியத்தின்படி ஒரு சகோதரன் தன் தங்கைக்குச் செய்யும் சீதனமாக, அரசின் சார்பில் திருமணப் பரிசளிக்கும் இத்திட்டத்திற்குத் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதுடன், இதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.விஜய் பெண்களைத் தன் குடும்ப உறுப்பினராகப் பார்க்கும் உயர்ந்த எண்ணத்தின் வெளிப்பாடாக உருவான இத்திட்டத்தின் மூலம், ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மணப்பெண்கள் பெருமளவில் பயனடைவார்கள். இத்திட்டத்தின்படி, அரசாணை வெளியிடப்பட்ட நாளுக்குப் பிறகு திருமணம் நிகழும் தகுதியான பெண்களுக்கு ஒரு பவுன் (8 கிராம்) தங்க நாணயமும், ஒரு தரமான பட்டுப் புடவையும் சீதனமாக வழங்கப்படும்.
தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு.. அதிரடி காட்டும் சென்னை ஹைகோர்ட்..!
முதற்கட்டமாக இதற்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பயனாளிகள் எளிதில் விண்ணப்பிக்கும் வகையில் பிரத்யேக இணையதளம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

