தென்னிந்தியத் திரையுலகத்தைத் தாண்டி பாலிவுட் வரை தனது கவர்ச்சியாலும், திறமையாலும் ரசிகர்களைக் கட்டிப்போட்டவர் நடிகை தமன்னா. சினிமா வாழ்க்கையில் பல உச்சங்களைத் தொட்ட அவர், சமீபத்தில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், தாய்மை உணர்வுகள் குறித்தும் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ள தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் வைரலையும் ஏற்படுத்தியுள்ளன.
நடிகர் விஜய் வர்மாவுடன் காதலில் வலம்வந்த அவர், சில காரணங்களால் பிரிந்து தற்போது முழுமையாகத் தன் சினிமா கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் ‘புருஷன்’ படம் உட்படப் பல முன்னணிப் படங்களில் அவர் பிஸியாக நடித்து வருகிறார்.
சிங்கிள் பெற்றோர்களை மட்டும் குறைகூறுவதா? சமந்தாவின் அதிரடிப் பதிவு..!
இதற்கிடையில், சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதில், “எதிர்காலத்தில் எனக்குக் குழந்தைகள் பிறந்தால் நான் ரொம்ப கண்டிப்பான அம்மாவாக இருப்பேன் என எங்கள் அம்மா நினைக்கிறார்கள். ஆனால், எனக்கு அதில் உடன்பாடு கிடையாது. நான் எப்போதும் என் குழந்தைகளுடன் மிகவும் சகஜமாகவும், ஜாலியாகவும் பழகும் ஒரு ‘கூலான’ அம்மாவாக இருக்கவே விரும்புகிறேன்.
‘இன்று ஸ்கூலுக்குப் போக வேண்டாம், ஜாலியா வீட்டுலேயே இருங்க’ என்று செல்லமாகச் சொல்லும் தாயாகவும், அவர்களுக்கு எப்போதுமே ஒரு நல்ல தோழியாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் எனது மிகப்பெரிய ஆசை” எனத் தெரிவித்துள்ளார். தமன்னாவின் இந்தப் பேட்டியைக் கண்ட ரசிகர்கள், அவருக்குள் ஒரு தாயாகும் தாய்மை உள்ளம் துளிர்விட்டுள்ளது போல என கமெண்ட் செய்து வருகின்றனர்.

