திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட ரோடு ஷோ நிகழ்வில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பொதுமக்களைச் சந்தித்தார். திறந்த வாகனத்தில் நின்றவாறு அவர் வீதி வீதியாக வலம் வந்தபோது, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் மகளிர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மலர் தூவியும், கரகாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் தொண்டர்கள் வரவேற்பை வெளிப்படுத்தினர்.
தங்கம் பிரியர்களுக்கு ஷாக்.. கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!
பொதுமக்களின் உற்சாக வரவேற்பைக் கண்டு நெகிழ்ந்த முதலமைச்சர், கை அசைத்து அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் அடிமட்ட மக்களையும் சென்றடைவதை சுட்டிக்காட்டிய அவர், மக்களின் எழுச்சிமிக்க ஆதரவு திராவிட மாடல் ஆட்சிக்குக் கிடைத்துள்ள நற்சான்றிதழ் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ரோடு ஷோ காரணமாக தாராபுரம் பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.

