தமிழகத்தில் பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தையும், பாதுகாப்பான பயணத்தையும் உறுதி செய்யும் வகையில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தின் விரிவாக்கமான ‘வெற்றிப் பயணம்’ திட்டம் இன்று கோலாகலமாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
காந்தி ஜெயந்தி நாளை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்து, பெண் பயணிகளுக்கு இலவசப் பயணச் சீட்டுகளை வழங்கினார்.
இனி அப்படிப்பட்ட படங்களில் நடிக்க மாட்டேன்.. ஓப்பனாக பேசிய அமலா பால்..!
முன்னதாக சாதாரண நகரப் பேருந்துகளில் மட்டுமே அமலில் இருந்த மகளிருக்கான இலவசப் பேருந்து பயணம், தற்போது மாநிலம் முழுவதிலும் உள்ள 12,692 அரசுப் பேருந்துகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எக்ஸ்பிரஸ் (Express), டீலக்ஸ் (Deluxe), எல்.எஸ்.எஸ். (LSS) மற்றும் மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் சாதாரணப் பேருந்துகளிலும் பெண்கள் மற்றும் திருநங்கைகள் கட்டணமின்றி பயணிக்க முடியும்.
இத்திட்டத்திற்கு வருமான வரம்போ அல்லது தினசரி பயண வரம்போ கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் லட்சக்கணக்கான மாணவிகள், பணிக்குச் செல்லும் பெண்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்துச் சுமை முழுமையாகக் குறையும் என்பதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

