தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நாயகியான சமந்தாவின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சினிமா பயணம் குறித்த தகவல்கள் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட விவாகரத்து மற்றும் மயோசிடிஸ் (Myositis) நோயின் தாக்கம் போன்ற கடினமான கட்டங்களைக் கடந்து மீண்ட வந்த சமந்தா, ‘குஷி’, ‘சாகுந்தலம்’ மற்றும் ‘சிட்டாடல்’ போன்ற தொடர்ச்சியான ப்ராஜக்ட்டுகளில் கவனம் செலுத்தினார். குறிப்பாக, ‘சிட்டாடல்’ வெப் சீரிஸை இயக்கிய இயக்குநர் ராஜ் நெடிமோருவுடன் ஏற்பட்ட காதல் மலர்ந்த நிலையில், கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மிக எளிய முறையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இரண்டு பேருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் சமந்தா, தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்த ‘மா இன்ட்டி பங்காரம்’ திரைப்படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், இவரது மார்க்கெட்டையும் உயர்த்தியுள்ளது.
பகவத் கீதை, ராமாயணம் போன்றது அப்பாவின் சுயசரிதை.. மனம் திறந்த சௌந்தர்யா ரஜினிகாந்த்..!
இப்படத்தின் வெற்றி விழாவின்போதே தான் கர்ப்பமாக இருப்பதை வெளிப்படுத்திய சமந்தா, தற்போது கணவருடன் வெளிநாட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில், இவருக்கு ஏற்கனவே குறைமாதத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துவிட்டதாகச் சமூக வலைதளங்களில் சில வதந்திகள் பரவின. ஆனால், அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒர்க் அவுட் மற்றும் பிக்கிள் பால் (Pickleball) விளையாட்டு வீடியோக்கள் அந்த வதந்திகளைத் தகர்த்துள்ளன. டிசம்பர் மாதத்தில் சமந்தாவின் பிரசவ தேதி குறிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

