தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பால் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர் நடிகை அஞ்சலி. ‘கற்றது தமிழ்’, ‘அங்காடித் தெரு’ போன்ற படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்த அவர், விஷாலின் ‘மகுடம்’ படத்தைத் தொடர்ந்து, தற்போது இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி மற்றும் சூரியுடன் இணைந்து ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அக்டோபர் 1-ம் தேதி இப்படம் ரிலீஸாகவிருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காகப் பல்வேறு யூடியூப் சேனல்களுக்குப் பேட்டியளித்து வரும் அஞ்சலி, தனது திருமணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்விகளுக்கு மிகவும் தைரியமாகவும் வெளிப்படையாகவும் பதிலளித்துள்ளார்.
தன்னிடம் பலரும் அடிக்கடி கேட்கும் ‘திருமணம் எப்போது?’ என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசியுள்ள அஞ்சலி, “கல்யாணம் என்பது ஒரு நாள் கொண்டாட்டம் அல்ல. அதற்குப் பின்னால் ஒரு பெண்ணின் மொத்த வாழ்க்கையும் மாறுகிறது, பல விஷயங்களை அவள் தியாகம் செய்ய வேண்டி இருக்கிறது. இவ்வளவு பொறுப்புகள் இருக்கும்போது, எதற்காகத் திரும்பத் திரும்ப இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள்?” எனத் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
பல விஷயங்கள் தற்செயல் ஆனால் இதுவல்ல.. மனம் திறந்த நடிகை டாப்சி..!
மேலும், “எனக்குத் திருமணம் நடந்தால் ஆடம்பரமான கூட்டம் தேவையில்லை; என்னை மனதார வாழ்த்தும் சில நல்ல உள்ளங்கள் இருந்தால் மட்டும் போதும். அதேபோல, மற்றவர்கள் நம்மைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக நம்முடைய சுய அடையாளத்தை ஒருபோதும் மாற்றிக் கொள்ளக் கூடாது. நான் எப்போதும் போல எனது ஒரிஜினாலிட்டியைத்தான் விரும்புவேன்” என அவர் பேசியுள்ளது தற்போது சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

