ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி மீதான போக்சோ வழக்கு விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாகப் பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ச்சியாகக் கேள்விகளை எழுப்பி வருகின்றன. அந்த வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கையும் கேள்விகளும் தற்போது மாநிலத்தின் கவனத்தை ஈர்த்துள்ளன.
கடந்த கால ஆட்சிக் காலங்களான 2013-ஆம் ஆண்டிலும் (அதிமுக ஆட்சி), அதனைத் தொடர்ந்து 2025-ஆம் ஆண்டிலும் (திமுக ஆட்சி) வீரமணி மீது புகார்கள் அளிக்கப்பட்டிருந்தும், அந்தந்தக் காலகட்டங்களில் ஏன் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அப்போதைய புகார்களைப் பெற்றுக் கொண்டு எங்கு கோப்புகள் முடக்கப்பட்டன? காவல்துறையினர் மீது யார் அழுத்தம் கொடுத்தார்கள்? குற்றவாளிகளுக்குத் துணை நின்ற காவல் துறை அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் யார்-யார்? என்பதை வெளிக்கொண்டு வர வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
“அதிமுக – திமுக எல்லாம் ஒரு கிளைக் கட்சி” – மதுராந்தகத்தில் அனல் பறக்கும் அரசியல்..!
இந்த விவகாரத்தில் அரசியல் சார்புகளுக்கு இடமளிக்காமல், உண்மையான குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெற வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

