கடந்த மே மாதம் நடைபெற்ற வைர நகை கண்காட்சி ஒன்றில் ஐஸ்வர்யா லட்சுமி கலந்துகொண்டபோது அவர் அணிந்திருந்த உடை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து விளக்கமளித்துள்ள அவர், தான் அணிந்த உடை தனக்குப் பிடித்திருந்ததாகவும், ஆனால் புகைப்படக் கலைஞர்கள் சிலரின் தவறான கோணங்களினாலேயே அது அசௌகரியமானதாக மாறியது என்றும் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
கலாச்சாரம் என்பது பெண்களின் உடைகளின் நீளத்திலா இருக்கிறது எனக் கேள்வி எழுப்பிய அவர், நாட்டின் பல முக்கியமான பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்காமல் ஒரு பெண்ணின் உடை மற்றும் உடல் உறுப்புகள் குறித்து மட்டும் ஏன் இவ்வளவு தீவிரமாக விவாதிக்கிறார்கள் என்று சரமாரியாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உள்குத்து இருக்கு.. ஓப்பனாக பேசிய போஸ் வெங்கட் மனைவி சோனியா..!
மேலும் இது போன்ற ட்ரோல்களை ஆரம்பத்தில் சிரித்துவிட்டு கடந்தாலும், நாட்கள் செல்லச் செல்ல இது எந்த அளவுக்கு விவாதமாக மாறியுள்ளது கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

