பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் விஜய் சேதுபதி பேசிய விவகாரம் குறித்துப் பேசிய சோனியா, நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்தே சில வியூகங்களும் உள்குத்துகளும் இருப்பதுபோல் தனக்குத் தோன்றியதாகக் கூறினார். குறிப்பாக, அவர் குறிப்பிட்ட சில உதாரங்கள் மற்றும் கருத்துகள் யாரையோ குறிவைத்துத் தாக்குவது போலவே அமைந்திருந்ததாக வெளிப்படையாகத் தெரிவித்தார்.
தவெகவினர் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதிக்கு எதிராகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வரும் அதேவேளையில், திரையுலகைச் சேர்ந்த பலரும், அரசியல் தலைவர்களும் கருத்துரிமை என்ற பெயரில் விஜய் சேதுபதிக்கு ஆதரவு கரம் நீட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தற்போது Kollywood மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.
இது முதலீட்டுப் பயணமா இல்லை ஜாலியா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி..!
முன்னதாக, பிக்பாஸ் 10-வது சீசனில் தொகுப்பாளர் விஜய் சேதுபதி பேசிய தலைமைப் பண்பு மற்றும் பொறுப்புணர்வு குறித்த கருத்துகள், நடிகர் விஜய்யை மறைமுகமாக விமர்சிப்பதாக உள்ளதாகக் கூறி தவெக மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து பிரபல நடிகர் போஸ் வெங்கட்டின் மனைவியும், நடிகையுமான சோனியா அளித்துள்ள பேட்டியில், “நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே ஏதோ உள்குத்து இருப்பது போல் தோன்றியது; தற்போது விஜய் சேதுபதி பேசியதும் யாரையோ தாக்கியது போலத்தான் இருந்தது” எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே சீமான், சீனு ராமசாமி உள்ளிட்டோர் விஜய் சேதுபதிக்கு ஆதரவு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

