மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஈர்த்த ரம்யா பாண்டியன், தற்போது வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் கோட் மற்றும் கருப்பு நிறப் பேன்ட் அணிந்து ஸ்டைலிஷ் அண்ட் மாடர்ன் லுக்கில் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் தீயாகப் பரவி வருகின்றன.

ரவிதேஜாவின் ‘இருமுடி’ வெற்றிக்குக் காரணம் இதுதான்.. பிரியா பவானி ஷங்கர் நெகிழ்ச்சி!
சேலை அணிந்த பாரம்பரிய லுக்காக இருந்தாலும் சரி, இந்த நவீன கால மாடர்ன் லுக்காக இருந்தாலும் சரி, ரம்யா பாண்டியன் எப்போதும் கெத்துதான் என்று நெட்டிசன்கள் தங்களது லைக்குகளையும் கமெண்ட்களையும் குவித்து வருகின்றனர்.

‘டம்மி டப்பாசு’ படத்தின் மூலம் அறிமுகமாகி, ‘ஜோக்கர்’ மற்றும் ‘ஆண் தேவதை’ போன்ற படங்களில் நடித்திருந்தாலும், அவருக்குப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது அந்த மொட்டை மாடி போட்டோஷிகூட்தான். அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி, பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

