தமிழகச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவின்படி, மதுபான பாட்டில்களின் விலை பாட்டிலுக்கு ரூ. 20 உயர்த்தப்பட உள்ளது. இந்த விலை உயர்வுக்கான மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசு வருவாயைப் பெருக்கவும், நிதி மேலாண்மைக்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்த அதிரடி விலை உயர்வு மதுப்பிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!
தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரி (VAT) சட்டத்தில் திருத்தம் செய்து, மதுபான விற்பனை மீது புதிதாக ‘சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் தீர்வை’ (Environmental and Social Welfare Cess) என்ற பெயரில் கூடுதல் வரி விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. மதுபானம் விற்கப்படும் பாட்டில்கள் அல்லது கலன்களின் (Unit Containers – கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் கான்கள், டெட்ரா பேக்குகள் போன்றவை) அடிப்படையில், பாட்டில் ஒன்றுக்கு ரூ. 20 வரை கூடுதல் கட்டணம் அல்லது தீர்வை வசூலிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.
காலி மது பாட்டில்கள் மற்றும் கான்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் வனவிலங்குகளுக்கு ஏற்படும் ஆபத்தைத் தடுத்து அவற்றை முறையாக மறுசுழற்சி செய்தல் (Recycling & Safe Disposal). மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள், மீட்புத் திட்டங்கள் மற்றும் இதனால் பாதிக்கப்படும் குடும்பங்களின் நலனுக்கான உதவிகளைச் செயல்படுத்த இந்தத் தொகை பயன்படுத்தப்பட உள்ளது.

