இயக்குநர் அட்லி இயக்கத்தில், ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்து வரும் பிரம்மாண்டமான திரைப்படம் ‘ராக்கா’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில், தற்போது நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் அதிகாரப்பூர்வமற்ற தகவலின்படி இணைந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
நயன்தாராவை விட கியாராவுக்கு இத்தனை கோடியா? – டாக்ஸிக் பட சம்பள விவரம் வெளியாகி ஷாக்..!
வழக்கமான கதாநாயகி கதாபாத்திரங்களை விடுத்து, இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட மற்றும் மிகவும் மிரட்டலான வில்லி (Negative Shade) கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இப்படத்தில் ஏற்கனவே தீபிகா படுகோன், மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா போன்ற முன்னணி நடிகைகள் இடம்பெற்றுள்ள நிலையில், ஐஸ்வர்யா லட்சுமியின் இணைவு இப்படத்தின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.

