சுவையான மற்றும் மணமணக்கும் பூண்டு குழம்பு செய்முறை மற்றும் அதற்கான குறிப்புகள் குறித்து இந்த பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்
- பூண்டு – 15 முதல் 20 பற்கள் (தோல் உரித்தது)
- சின்ன வெங்காயம் – 10 முதல் 12 (பொடியாக நறுக்கியது)
- தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
- புளி – எலுமிச்சை அளவு (தண்ணீரில் கரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)
- நல்லெண்ணெய் – 3 முதல் 4 ஸ்பூன் (குழம்புக்கு நல்லெண்ணெய் சேர்ப்பது மணத்தைக் கூட்டும்)
- கடுகு, சீரகம், வெந்தயம் – தலா அரை ஸ்பூன்
- மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
- மிளகாய்த்தூள் / குழம்பு மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிதளவு
- பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
- உப்பு – தேவையான அளவு
- வெல்லம் – சிறிய துண்டு (விரும்பினால் சுவைக்காக)
செய்முறை
Step 1: முதலில் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு உரித்து வைத்துள்ள பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தைச் சேர்த்து, பச்சை வாசனை நீங்கி லேசாக நிறம் மாறம் வரை நன்றாக வதக்க வேண்டும்.
Step 2: இதனுடன் நறுக்கிய தக்காளி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து, தக்காளி குழைந்து வரும் வரை வதக்கவும். இப்போது மஞ்சள் தூள் மற்றும் குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து, எண்ணெயில் மசாலா கருகாமல் லேசாக வதக்க வேண்டும்.
நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!
Step 3: நாம் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். குழம்பு நன்றாகக் கொதித்து, புளியின் பச்சை வாசனை நீங்கி, எண்ணெய் பிரிந்து வரும் வரை மிதமான தீயில் 10 முதல் 15 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். இறுதியாகச் சிறிதளவு வெல்லம் சேர்த்தால் சுவை அருமையாக இருக்கும்.

