எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், கைது நடவடிக்கையைச் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும், தமிழகம் முழுவதும் திமுகவினரின் தொடர் போராட்டங்கள் மற்றும் தற்போதைய பதற்றமான சூழலைக் கட்டுப்படுத்துவது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
பட்ஜெட் கூட்டத்தொடர்க்கு முன்பே அனல் பறக்கும் அரசியல் களம்; உதயநிதி கைது: முதல்வர் போடும் கணக்கு..!
மேலும், நாளை தொடங்கவுள்ள சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுங்கட்சிக்கு எதிராகக் கடைபிடிக்க வேண்டிய உத்திகள் குறித்தும் முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

