முதலமைச்சர் விஜய்யின் தவெக ஆட்சியை கவிழ்க்க, தவெக எம்.எல்.ஏ.விடம் ரூ. 35 கோடி பேரம் பேசியதாகப் புகார் எழுந்துள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மீது ஊழல் தடுப்புச் சட்டம் உட்பட 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆகியோரின் பின்னணி இருப்பது தெரியவந்துள்ளதாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. கைதானவர்கள், அசோக் குமார் தங்களை நேரில் சந்தித்து ஆலோசனைகள் வழங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜேசன் சஞ்சய் vs லோகேஷ் கனகராஜ்.. வசூல் மன்னன் யார்? ‘சிக்மா’ மற்றும் ‘DC’ மோதல்..!
தற்போதைய தவெக அரசு பெரும்பான்மையுடன் இருந்தாலும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பதாகக் கூறி வரும் நிலையில், இந்த வழக்கு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, காவல்துறை இது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

