கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் (X) பக்கத்தில் வெளியிட்ட அந்தப் பதிவு, தற்போதைய அரசியல் சூழலில் ஒரு ‘டிஜிட்டல் நையாண்டி’யாகப் பார்க்கப்படுகிறது.
வட மாநிலங்களில் பாஜகவைப் பயன்படுத்தும் ஒரு அரசியல் உத்தியை (தங்கள் கட்சியில் இணையும் எதிர்க் கட்சித் தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் ‘வாஷிங் மெஷினில்’ துவைக்கப்பட்டது போல நீக்கப்படும் என்ற குற்றச்சாட்டு), தற்போது தமிழ்நாட்டிலும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கையாள்வதாக அவர் விமர்சித்துள்ளார்.
முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தவெகவில் இணைந்ததைக் குறிப்பிட்டே அவர் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, ஒரு காலத்தில் அரசியல் ரீதியாக விவாதிக்கப்பட்ட ‘குட்கா’ விவகாரம் போன்ற சர்ச்சைகளை, இந்த ‘தமிழ்நாடு மாடல் வாஷிங் மெஷின்’ மூலம் துடைத்துவிட முடியுமா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
TVK ஆட்சியை கவிழ்க்க சதியா?.. 12 எம்.எல்.ஏ.க்களை வளைக்க திட்டம்..!
ஊழல் அல்லது சர்ச்சைக்குரிய பின்னணி கொண்ட தலைவர்கள் தவெகவில் இணைந்தால், அவர்களது பழைய குற்றச்சாட்டுகள் அப்படியே மறைந்துவிடுமா (வாஷிங் மெஷினில் துவைப்பது போல) என்ற பொருளில், அரசியல் நையாண்டியுடன் அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். இந்த விமர்சனம் தற்போது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கில் பாஜக பயன்படுத்தி வந்ததைப் போன்ற 'வாஷிங்மெஷின்' ஒன்று, தற்போது தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டது என்று கேள்விப்பட்டேன். இந்த புது தமிழ்நாடு மாடல் மெஷின் குட்கா கரைகளைக் கூட நீக்கும் என்று சொல்கிறார்களே… உண்மையா?
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) July 2, 2026

