திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் அவர்களின் மறைவுக்குப் பின் வெளியான அந்த உருக்கமான கடிதம், தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
“என் கண்களை உங்கள் அன்பான பார்வைக்கு விட்டு விட்டு வந்திருக்கிறேன்” என்று கூறி, தனது கண்களைத் தானம் செய்துள்ளதை அவர் மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளார். அதன் மூலம் அவர் ரசிகர்களைத் தொடர்ந்து கவனித்துக்கொண்டிருப்பதாக உணர்த்தியுள்ளார்.
தனது மகன் சாந்தனுவின் வெற்றிக்குத் தனது ரசிகர்களைத் துணையாக இருக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். ரசிகர்களைத் தன் குடும்பமாகவே பார்த்த அவருக்கு, சாந்தனுவை ரசிகர்களிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்வது போல இந்தக் கடிதம் அமைந்துள்ளது.
கேரள மாடலில் அரசு தியேட்டர்கள்?.. சீனு ராமசாமியின் முக்கிய கோரிக்கைகள்..!
“வரும் போதே expiry date குறிக்கப்படாத உடல் இது… எஞ்சியிருப்பது அன்பே ஆஸ்தியாய்” என்று வாழ்க்கை குறித்த தனது தத்துவத்தை மிக எளிமையாகத் தெரிவித்துள்ளார்.
தான் உடலால் பிரிந்தாலும், நல்ல சினிமா, சிறந்த திரைக்கதை, வசனங்கள் மற்றும் மனித மாண்புகளில் தான் எப்போதும் உயிர்ப்போடு இருப்பேன் என உருக்கமான வரிகளை எழுதியுள்ளார்.
தன்னுடைய இறுதிப் பயணத்திலும் கூட, ரசிகர்களுக்காகவும் தன் மகனுக்காகவும் சிந்தித்து எழுதிய இந்தக் கடிதம், அவர் ஒரு சிறந்த மனிதர் என்பதையும், திரையுலகின் மீது அவர் கொண்ட தீராத காதலையும் மீண்டும் நிரூபித்துள்ளது. இக்கடிதம் பல ரசிகர்களைக் கண் கலங்க வைத்துள்ளது.
From the OFFICE of
— K Bhagyaraj (@UngalKBhagyaraj) June 30, 2026
Director #KBhagyaraj sir pic.twitter.com/ikSx6KwOMt

