இருட்டில் ஸ்கை நெட் கடையில் புகுந்த 2 வாலிபர்கள் – அவிநாசி சாலையில் தொடரும் நள்ளிரவு அராஜகம்.கோவை, அவிநாசி சாலையில் கடைக்கு முன்னால் எரிந்து கொண்டு இருந்த மின்விளக்கை ஆயுதத்தால் அடித்து உடைத்து விட்டு, கும்மிருட்டில் கடையின் பூட்டை உடைத்து இரண்டு வாலிபர்கள் கைவரிசை காட்டி உள்ள அதிர்ச்சியூட்டும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி, கோவை வணிகர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
சாலையில் கொட்டிய டீசல்.. வழுக்கி விழுந்த இருசக்கர வாகன ஓட்டிகள்..!
கோவை, அவிநாசி சாலை, தென்னம்பாளையம் கணேஷ் பேக்கரி அருகில் ‘ஸ்கை நெட்’ என்ற வணிக நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நேற்று நள்ளிரவில் இந்த நிறுவனத்திற்குள் கொள்ளை அடிக்கும் நோக்கில் இரண்டு இளம் வாலிபர்கள் வந்து உள்ளனர். அப்போது கடையின் முகப்பில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமராவில் தங்களது முகம் தெளிவாகத் தெரிந்து விடும் என்பதாலும், வெளிச்சம் இருந்தால் மாட்டிக் கொள்வோம் என்பதாலும், தாங்கள் கையில் வைத்து இருந்த ஆயுதத்தால் அங்கு இருந்த மின்விளக்கை முதலில் அடித்து உடைத்து நொறுக்கினர்.
விளக்கு உடைந்ததும் அந்த இடமே இருள் சூழ்ந்த உடனே, தங்களது ‘டார்க் ஆபரேஷனை’ தொடங்கிய அந்த மர்ம நபர்கள், கடையின் பூட்டை இரும்பு கம்பியால் நெம்பி உடைத்து உள்ளே புகுந்தனர். கல்லாப் பெட்டியில் இருந்த பணம் மற்றும் கடையில் இருந்த பொருட்களைத் திருடிக் கொண்டு அங்கு இருந்து தப்பியோடி விட்டனர்.
மறுநாள் காலை கடை பூட்டு உடைக்கப்பட்டு, லைட் நொறுங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உரிமையாளர்,, அங்கு இருந்த கேமராக்களின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, அந்த வாலிபர்கள் லைட்டை உடைப்பதும், பூட்டை உடைத்து திருடிச் செல்வதும் போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.இந்த அதிர்ச்சியூட்டு சி.சி.டி.வி காட்சிகள் தற்போது கோவையின் சமூக வலைதளப் பக்கங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
“அவிநாசி சாலை மற்றும் தென்னம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாகத் திருடர்கள் நடமாட்டம் மிக அதிகமாக உள்ளது. எனவே, வியாபாரிகளும் பொதுமக்களும் கூடுதல் கவனமாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்” எனப் பொதுமக்கள் ஒருவருக்கொருவர் இணையத்தில் ‘அலர்ட்’ விடுத்து வருகின்றனர்.இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து, லைட்டை உடைத்து அராஜகம் செய்த அந்த 2 திருடர்களையும் போலீஸார் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனத் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

