Close Menu
    What's Hot

    லைட்டை உடைத்து ‘டார்க் ஆபரேஷன்’.. சிசிடிவி-ல் சிக்கிய திருடர்கள்..!

    July 1, 2026

    ஜூனியர் தளபதியை கொண்டாட ரெடியா?.. ‘சிக்மா’ அப்டேட்.. ரிலீஸ் தேதி உறுதி..!

    July 1, 2026

    கோவை முதலிடம்.. மின் திருட்டு சோதனையில் தமிழக மின்சார வாரியம் காட்டிய அதிரடி..!

    July 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»லைட்டை உடைத்து ‘டார்க் ஆபரேஷன்’.. சிசிடிவி-ல் சிக்கிய திருடர்கள்..!
    கோவை

    லைட்டை உடைத்து ‘டார்க் ஆபரேஷன்’.. சிசிடிவி-ல் சிக்கிய திருடர்கள்..!

    Prime ReporterBy Prime ReporterJuly 1, 2026Updated:July 1, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-avinasai-road-shop-theft-cctv-viral
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இருட்டில் ஸ்கை நெட் கடையில் புகுந்த 2 வாலிபர்கள் – அவிநாசி சாலையில் தொடரும் நள்ளிரவு அராஜகம்.கோவை, அவிநாசி சாலையில் கடைக்கு முன்னால் எரிந்து கொண்டு இருந்த மின்விளக்கை ஆயுதத்தால் அடித்து உடைத்து விட்டு, கும்மிருட்டில் கடையின் பூட்டை உடைத்து இரண்டு வாலிபர்கள் கைவரிசை காட்டி உள்ள அதிர்ச்சியூட்டும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி, கோவை வணிகர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    சாலையில் கொட்டிய டீசல்.. வழுக்கி விழுந்த இருசக்கர வாகன ஓட்டிகள்..!

    கோவை, அவிநாசி சாலை, தென்னம்பாளையம் கணேஷ் பேக்கரி அருகில் ‘ஸ்கை நெட்’ என்ற வணிக நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நேற்று நள்ளிரவில் இந்த நிறுவனத்திற்குள் கொள்ளை அடிக்கும் நோக்கில் இரண்டு இளம் வாலிபர்கள் வந்து உள்ளனர். அப்போது கடையின் முகப்பில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமராவில் தங்களது முகம் தெளிவாகத் தெரிந்து விடும் என்பதாலும், வெளிச்சம் இருந்தால் மாட்டிக் கொள்வோம் என்பதாலும், தாங்கள் கையில் வைத்து இருந்த ஆயுதத்தால் அங்கு இருந்த மின்விளக்கை முதலில் அடித்து உடைத்து நொறுக்கினர்.

    விளக்கு உடைந்ததும் அந்த இடமே இருள் சூழ்ந்த உடனே, தங்களது ‘டார்க் ஆபரேஷனை’ தொடங்கிய அந்த மர்ம நபர்கள், கடையின் பூட்டை இரும்பு கம்பியால் நெம்பி உடைத்து உள்ளே புகுந்தனர். கல்லாப் பெட்டியில் இருந்த பணம் மற்றும் கடையில் இருந்த பொருட்களைத் திருடிக் கொண்டு அங்கு இருந்து தப்பியோடி விட்டனர்.

    மறுநாள் காலை கடை பூட்டு உடைக்கப்பட்டு, லைட் நொறுங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உரிமையாளர்,, அங்கு இருந்த கேமராக்களின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, அந்த வாலிபர்கள் லைட்டை உடைப்பதும், பூட்டை உடைத்து திருடிச் செல்வதும் போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.​இந்த அதிர்ச்சியூட்டு சி.சி.டி.வி காட்சிகள் தற்போது கோவையின் சமூக வலைதளப் பக்கங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

    “அவிநாசி சாலை மற்றும் தென்னம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாகத் திருடர்கள் நடமாட்டம் மிக அதிகமாக உள்ளது. எனவே, வியாபாரிகளும் பொதுமக்களும் கூடுதல் கவனமாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்” எனப் பொதுமக்கள் ஒருவருக்கொருவர் இணையத்தில் ‘அலர்ட்’ விடுத்து வருகின்றனர்.இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து, லைட்டை உடைத்து அராஜகம் செய்த அந்த 2 திருடர்களையும் போலீஸார் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனத் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Avinashi Road theft Coimbatore CCTV viral Coimbatore Crime News Coimbatore theft அவிநாசி சாலை கோயம்புத்தூர் கொள்ளை சிசிடிவி காட்சிகள் ஸ்கை நெட் கடை கொள்ளை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாலையில் கொட்டிய டீசல்.. வழுக்கி விழுந்த இருசக்கர வாகன ஓட்டிகள்..!

    June 30, 2026

    பைக்குகளைக் குறிவைக்கும் ‘பிளேடு சைக்கோ’.. மர்ம நபரைத் தேடி அலையும் வாகன ஓட்டிகள்..!

    June 30, 2026

    குழந்தைகளுக்குத் ‘தாய்மாமன் சீர்’.. மோதிரம் வழங்கிய அமைச்சர்..!

    June 29, 2026

    பெரிய விபத்துகளுக்கு இதுதான் ஆரம்பமா?.. அரைகுறையாக மூடப்பட்ட குழியில் சிக்கிய லாரி..!

    June 27, 2026

    ஒரே இரவில் பூத்த 24 பிரம்மக்கமல மலர்கள்.. ஆரத்தி எடுத்து வழிபட்ட குடும்பத்தினர்..!

    June 27, 2026

    ஒரு குவாட்டர் கேட்டதால் ஆத்திரம்.. புதுமண பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

    June 26, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அப்பா மேல் இவ்வளவு பாசமா?.. ட்விட்டரை கலக்கும் ஜேசன் சஞ்சய் வைரல் வீடியோ..!

    July 1, 2026

    லைட்டை உடைத்து ‘டார்க் ஆபரேஷன்’.. சிசிடிவி-ல் சிக்கிய திருடர்கள்..!

    July 1, 2026

    ப்பா.. என்ன பொண்ணுடா.. எதிர்பார்ப்பை எகிற வைத்த ‘டாக்ஸிக்’..!

    July 1, 2026

    Expiry Date குறிக்கப்படாத உடல்.. ரசிகர்களிடம் மகன் சாந்தனுவை ஒப்படைத்த பாக்யராஜ்..!

    July 1, 2026

    தனிமனிதத் தாக்குதல்களா?.. வீடியோவைப் போட்டு மானத்தை வாங்கிவிட்ட ஜூலி..!

    July 1, 2026
    Don't Miss

    லைட்டை உடைத்து ‘டார்க் ஆபரேஷன்’.. சிசிடிவி-ல் சிக்கிய திருடர்கள்..!

    July 1, 2026

    கோவையில் மின்விளக்கை உடைத்துவிட்டு இருட்டில் கடைக்குள் புகுந்து திருடிய மர்ம நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜூனியர் தளபதியை கொண்டாட ரெடியா?.. ‘சிக்மா’ அப்டேட்.. ரிலீஸ் தேதி உறுதி..!

    July 1, 2026

    கோவை முதலிடம்.. மின் திருட்டு சோதனையில் தமிழக மின்சார வாரியம் காட்டிய அதிரடி..!

    July 1, 2026

    இளையராஜாவுக்கு பின்னடைவு?.. 134 பாடல்கள் விவகாரம்; நாளுக்கு நாள் சூடு பிடிக்கும் பிரச்னை..!

    July 1, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.