கோவை மாவட்டம், செல்வபுரம் பகுதியில் உள்ள, அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், தாய் மாமன் சீர் வழங்கும் விழா இன்று நடைபெற்றது இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக, கோவை மாவட்ட பொருப்பு அமைச்சரும், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான சம்பத்குமார் குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கினார்.
கோவை மாவட்டம், செல்வபுரம் பகுதியில் உள்ள, அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், தாய் மாமன் சீர் வழங்கும் விழா இன்று நடைபெற்றது இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக, கோவை மாவட்ட பொருப்பு அமைச்சரும், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான சம்பத்குமார் கலந்து கொண்டு, இன்று பிறந்த 4 குழந்தைகளுக்கு தமிழக அரசு அறிவித்த தாய்மாமன், தங்கமோதிரங்கள், திட்டத்தின் கீழ் தங்க மோதிரங்களை வழங்கினார்.
தொடர்ந்து அரசு நகர் நல அலுவலகத்தில் மருத்துவர்கள், மற்றும் செவிலியர்களிடம் இங்கு சிகிச்சைக்கு வரும் புற நோயாளிகள், அவருகளுக்கு அளிக்க படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் மருத்துவதேவைகள் ஏதேனும் உள்ளதா என்று கேட்டறிந்ததுடன், குறைகள் இருந்தால் தெரிவியுங்கள் உடனுக்குடன் நிவர்த்தி செய்து தர படும், பொதுமக்களுக்கு உரிய மருத்துவம் தரமானதாகவும், தங்கு தடையில்லாமல் கிடைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இனி ஜாதி இருக்காது.. அடையாள அட்டை சர்ச்சைக்கு அமைச்சர் ராஜ்மோகன் முற்றுப்புள்ளி..!
இந்த நிகழ்ச்சியில்கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார், செல்வபுரம் பகுதி செயலாளர் பாலா, இணை செயலாளர் அருண் குமார், மற்றும் 76,77,78,79 வார்டு பகுதி செயலாளர்கள் சிலம்பரசன், மாணிக்கம், மணிகண்டன், தீபக், மகளீரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, தமிழக அமைச்சருக்கு, சால்வைகள் அணிவித்தும், மாலைகள் அணிவித்தும் வரவேற்பு அளித்ததுடன், அமைச்சருடன் செல்பி, புகைபடங்களும் எடுத்து மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

