பவளம் அணிவதன் 10 முக்கிய பலன்கள்
பயம் நீங்கும்
செவ்வாய் பகவான் வீரம் மற்றும் ஆற்றலுக்கு அதிபதி என்பதால், பவளம் அணிவது மன பயத்தைப் போக்கி மன உறுதியை அதிகரிக்கும்.
தடைகள் நீங்கும்
வாழ்க்கை அல்லது தொழிலில் அடிக்கடி ஏற்படும் தேவையற்ற தடைகள், எதிர்ப்புகளை நீக்கி வெற்றியைத் தரும்.
கடன் தொல்லை தீரும்
ஜாதகத்தில் செவ்வாய் பலவீனமாக இருப்பதால் ஏற்படும் கடன் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடவும், பொருளாதார நிலைத்தன்மைக்கும் உதவும்.
முன்னோர்களின் படங்களை பூஜை அறையில் வைக்கலாமா?.. அமேசிங் வாஸ்து முறைகள்..!
திருமண தடை நீங்கும்
செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வு. திருமண தாமதத்தை நீக்கி, தம்பதியரிடையே ஒற்றுமையை வளர்க்கும்.
கண் திருஷ்டி பாதுகாப்பு
செய்வினை, கண் திருஷ்டி மற்றும் தீய சக்திகளிடம் இருந்து பாதுகாக்கும் ஒரு ஆன்மீக கவசமாகச் செயல்படுகிறது.
முன்னோர்களின் படங்களை பூஜை அறையில் வைக்கலாமா?.. அமேசிங் வாஸ்து முறைகள்..!
சுறுசுறுப்பு தரும்
உடலில் உள்ள சோம்பல் குணத்தை நீக்கி, எப்போதும் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவும்.
சொத்து சேர்க்கை
செவ்வாய் ‘பூமி காரகன்’ என்பதால், நிலம், வீடு அல்லது சொத்து தொடர்பான விவகாரங்களில் சாதகமான பலன்களைத் தரும்.
கோபம் குறையும்
முன்கோபம் மற்றும் தேவையற்ற ஆத்திரத்தைக் குறைத்து, மனதை நிதானப்படுத்தி சரியான முடிவுகளை எடுக்க வழிகாட்டும்.
மருத்துவ பயன்கள்
இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. சரும நோய்கள், வயிற்றுப் புண் மற்றும் உடல் உஷ்ணம் தொடர்பான பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது.
மன ஒருமைப்பாடு
கவனச்சிதறல்களைக் குறைத்து மன ஒருமைப்பாட்டை அதிகரிப்பதால், தியானம் மற்றும் வழிபாடுகளில் முழுமையாக ஈடுபடலாம்.

