Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 6: உங்களுக்குரிய வியாழக்கிழமை பலன்கள் என்னென்ன?

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»3 செய்தி சேனல்கள் முடக்கம்.. ஊடக சுதந்திரம் பறிபோகிறதா? எல்.முருகன் கேள்வி..!
    தமிழ்நாடு

    3 செய்தி சேனல்கள் முடக்கம்.. ஊடக சுதந்திரம் பறிபோகிறதா? எல்.முருகன் கேள்வி..!

    Prime ReporterBy Prime ReporterJune 10, 2026Updated:June 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    l-murugan-condemns-tvk-govt-media-ban
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக அரசு கேபிள் டிவியில் 3 செய்தி சேனல்கள் முடக்கப்பட்டதற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கடும் கண்டனம் தெரிவித்து, பத்திரிகை சுதந்திரத்தை காக்க வலியுறுத்தியுள்ளார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது,

    3 செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா? உண்மையை மறைக்க முயலும் தவெக அரசுக்கு கடும் கண்டனம்! தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வழங்கும் ஒளிபரப்புச் சேவையிலிருந்து பாலிமர் நியூஸ், நியூஸ் தமிழ் 24×7, தமிழ் ஜனம் ஆகிய செய்தித் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மின் வெட்டினால் பொதுமக்கள் படும் அவதி, தொடரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட செய்திகளை ஒளிபரப்பியதால் ஆளும் தவெக அரசு, எதேச்சாதிகார போக்குடன் 3 சேனல்களையும் முடக்கியுள்ளது. ஜனநாயகத்தின் 4 ஆவது தூணான ஊடகங்கள் தான், அரசு நிர்வாகத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதிலும், மக்களின் அன்றாட பிரச்னைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதிலும் முக்கிய பங்காற்றுகின்றன.

    தத்தக்கா பித்தக்கா ஆட்சியா?.. TVK-அமைச்சரின் ‘திடீர் விசிட்’.. அம்பலப்படுத்திய எச்.ராஜா..!

    ஆனால் ஊடகங்களின் குரல்வளையை நெரிப்பதன் மூலம் ஆட்சியின் அவலங்கள் மக்களிடம் சென்றடையாமல் தடுத்து விட முடியும் என தவெக அரசு எண்ணுகிறது. 3 சேனல்கள் முடக்கப்பட்டிருப்பது, பத்திரிகை சுதந்திரத்தைப் பறிப்பது மட்டுமின்றி ஜனநாயகத்திற்கும் எதிரானது. அரசு நிர்வாகத்தின் மீதான விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் ஊடகங்களின் குரலை ஒடுக்க நினைப்பதும் தவெக அரசின் செயலற்ற தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

    மாற்றுக் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத தவெக அரசு, ஊடகங்களை முடக்க நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு அரசுத் தரப்பில் சொல்லப்படும் காரணங்கள் எதிலும் உண்மையில்லை. கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடுமா? ஊடகங்களை முடக்கினால் உண்மைகளை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை தவெக அரசு கைவிட்டு, நீக்கப்பட்ட சேனல்களின் ஒளிபரப்பு தொடர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    3 செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா?

    உண்மையை மறைக்க முயலும் தவெக அரசுக்கு கடும் கண்டனம்!

    தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வழங்கும் ஒளிபரப்புச் சேவையிலிருந்து பாலிமர் நியூஸ், நியூஸ் தமிழ் 24×7, தமிழ் ஜனம் ஆகிய செய்தித் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு…

    — Dr.L.Murugan (@DrLMurugan) June 10, 2026
    Cable TV Channel Ban L Murugan Media Freedom TN TVK Govt Tamil Nadu எல் முருகன் கேபிள் டிவி சேனல்கள் முடக்கம் தமிழ்நாடு செய்திகள் தவெக அரசு பத்திரிகை சுதந்திரம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026

    நாளை தாக்கல் செய்யப்படுகிறது வேளாண் பட்ஜெட்.. செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நீடிக்கும் கூட்டத்தொடர்..!

    August 5, 2026

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செக்மெண்ட் சேஞ்ச்.. மெகா பட்ஜெட் பிளான் என்ன தெரியுமா?..

    August 5, 2026

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட் கூட்டத்தொடர்க்கு முன்பே அனல் பறக்கும் அரசியல் களம்; உதயநிதி கைது: முதல்வர் போடும் கணக்கு..!

    August 4, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    ஆகஸ்ட் 6: உங்களுக்குரிய வியாழக்கிழமை பலன்கள் என்னென்ன?

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 6: உங்களுக்குரிய வியாழக்கிழமை பலன்கள் என்னென்ன?

    August 6, 2026

    06.08.2026 வியாழக்கிழமை நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்களை இங்கே முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.