தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
CBSE பள்ளிகளை தமிழக அரசு கட்டுப்படுத்த முடியாதா?.. கல்வி கட்டணம் ஒன்றும் கருப்பு பணம் அல்லவே..!
முன்னதாக தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் இன்று மதியம் ஒரு மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, கோயம்புத்தூர், தேனி, திருப்பூர், திருநெல்வேலி, விருதுநகர், ஆகிய மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

