Close Menu
    What's Hot

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»மீனவர் வாழ்வாதாரமும், கடல் வளமும் அழியும்.. ஹைட்ரோ கார்பன் திட்டம் – டிடிவி தினகரன் ஆருடம்..!
    தமிழ்நாடு

    மீனவர் வாழ்வாதாரமும், கடல் வளமும் அழியும்.. ஹைட்ரோ கார்பன் திட்டம் – டிடிவி தினகரன் ஆருடம்..!

    Prime ReporterBy Prime ReporterJune 12, 2026Updated:June 12, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    hindustan-oil-seeks-hydrocarbon-wells-cuddalore
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பரங்கிப்பேட்டை அருகே கடலில் 4 புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் அனுமதி கோரியுள்ளதற்குத் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது,

    கடலூர் அருகே கடற்பகுதி எல்லைக்குள் புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் விண்ணப்பம் – கடல் வளத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் இத்திட்டத்தை எந்தவகையிலும் அனுமதிக்கக் கூடாது.

    கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டையிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் கடற்பகுதி எல்லைக்குள் இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் சார்பில் ஏற்கனவே அமைக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் கிணறுகளில் எண்ணெய் இருப்பு குறைந்துவிட்டதால் அதே இடத்தில் மேலும் நான்கு கிணறுகளை அமைக்க அனுமதி கோரி மாநில அரசின் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் அந்நிறுவனம் விண்ணப்பித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

    Zero tolerance-ஆ? இல்லை Zero Control-ஆ?.. நயினார் நாகேந்திரன் கேள்வி..!

    ஏற்கனவே அமைக்கப்பட்ட ஹைட்ரோகார்பன் கிணறுகளால் கடல் வாழ் உயிரினங்களும், இயற்கை வளங்களும் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில், தற்போது மேலும் 4 கிணறுகளை அதே இடத்தில் அமைக்க முற்படுவது கடல் வாழ் உயிரினங்கள் மட்டுமல்லாது கடல் சார்ந்து வாழக்கூடிய மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.

    ஹைட்ரோகார்பன் இருப்பை ஆய்வு செய்யப் பயன்படுத்தப்படும் நில அதிர்வுச் சோதனையின் போது எழும்பும் வெடிச் சத்தமும், அதிலிருந்து கசியும் ரசாயனக் கழிவுகளும் அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயரும் அல்லது இறந்து போகும் அபாயம் ஏற்படும் என கடல்சார் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

    எனவே, கடல் வளத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில் புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க முடிவு செய்து தமிழக அரசின் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் வழங்கியிருக்கும் விண்ணப்பத்தை ஆரம்ப நிலையிலேயே நிராகரித்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Cuddalore New Hydrocarbon Project Environmental Impact Assessment TN 2026 Fishermen Livelihood Issue Cuddalore Hindustan Oil Exploration Company HOEC Hydrocarbon Wells Bay of Bengal Parangipettai Offshore Oil Drilling Tamil Nadu Coastal Zone Management இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் விண்ணப்பம் கடலூர் புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகள் கடல்சார் சுற்றுச்சூழல் மாசடைதல் தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை தவெக அரசு ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு பரங்கிப்பேட்டை எண்ணெய் கிணறு சர்ச்சை மீனவர்கள் வாழ்வாதார பாதிப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026
    Don't Miss

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026

    செப்டம்பர் 24, 2026 வியாழக்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.