திருவைகுண்டத்தில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தவெக அரசு மற்றும் முதல்வர் விஜய் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என கனிமொழி எம்.பி வலியுறுத்தியுள்ளார். திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது,
திருவைகுண்டம் அருகே பெண் ஒருவர், தவெக நிர்வாகிகள் இருவரால் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் செல்லப்பட்டு, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. பெண்கள் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ள இன்றைய சூழலில், தேர்தல் காலத்தைப் போல திமுகவின் மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு, தாங்கள் தான் ஆளுங்கட்சி என்பதை உணர்ந்து ‘பொறுப்புடன்’ முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் செயல்பட போவது எப்போது?
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவைகுண்டம் அருகே பெண் ஒருவர், தவெக நிர்வாகிகள் இருவரால் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் செல்லப்பட்டு, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) June 2, 2026
பெண்கள் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ள இன்றைய சூழலில், தேர்தல்…

