Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»கார்ப்பரேட்டுகளுக்குத் தாராளமா?.. மருத்துவக் கொள்கை குறித்து சீமான் கேள்வி..!
    தமிழ்நாடு

    கார்ப்பரேட்டுகளுக்குத் தாராளமா?.. மருத்துவக் கொள்கை குறித்து சீமான் கேள்வி..!

    Prime ReporterBy Prime ReporterMay 23, 2026Updated:May 23, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    seeman-questions-healthcare-sector-privatization-issues
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சுகாதாரத்துறையில் தனியார்மயமாக்கலை அரசு ஊக்குவிக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;

    அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, மருத்துவத்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பதா?

    புதிதாக 8,000 மருத்துவமனைகளைத் திறப்பதற்கு இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனும் தவெக அரசின் அறிவுப்பு அதிர்ச்சியளிக்கிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தரம் உயர்த்துவோம் எனவும், கிராமப்புற மருத்துவமனைகளை நவீனமாக்குவோம் எனவும் தேர்தலில் வாக்குறுதியளித்துவிட்டு, இப்போது மருத்துவத்துறையில் கண்மூடித்தனமாகத் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் அரசின் செயல்பாடு வாக்குச் செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்யும் சனநாயகத் துரோகமாகும்.

    தனியார் முதலாளிகளின் இலாபவெறிக்கு மருத்துவத்துறையை தாரைவார்த்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனவும், ஆய்வுக்குப் பிறகு, நிரந்தர அனுமதி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருப்பது மருத்துவத்துறையில் சீர்கேடுகள் பெருகவே வழிவகுக்கும்.

    அரசு மருத்துவமனைகளின் குறைபாடுகளையும், போதாமைகளையும், சிக்கல்களையும் தீர்த்து, அவற்றைத் தரம் வாய்ந்ததாக மாற்ற முயற்சி எடுக்காது, 8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு இப்போது எதற்கு திடீர் அனுமதி? ஏன் இந்த அவசரகதியிலான ஏற்பாடு? யாரைத் திருப்திப்படுத்த நடக்கிறது? யாருக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக இந்த தான்தோன்றித்தனமான அனுமதியும், உள்நுழையும்? ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், மாநிலத்தை ஆண்ட முந்தைய திமுக, அதிமுக அரசுகளும் தனியார்மயத்தை அரசின் நிர்வாகக்கொள்கை முடிவாகக் கொண்டதையே தவெக அரசும் அடியொற்றுமென்றால், எங்கிருக்கிறது மாற்று அரசியல்? எங்கிருக்கிறது மக்களுக்கான ஆட்சி? வெட்கக்கேடு! ஆகவே, மருத்துவத்துறையை தனியார்மயமாக்கும் செயலை கைவிட்டு, அரசு மருத்துவமனைகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் தரம்உயர்த்தி, அனைவருக்கும் தரமான மருத்துவச்சிகிச்சைக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, மருத்துவத்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பதா?@CMOTamilnadu@TVKVijayHQ

    புதிதாக 8,000 மருத்துவமனைகளைத் திறப்பதற்கு இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனும் தவெக அரசின் அறிவுப்பு… pic.twitter.com/UR9TCGVYWp

    — செந்தமிழன் சீமான் (@Seeman4TN) May 23, 2026
    Government hospitals medical facilities Naam Tamilar Katchi latest news NTK leader Seeman press meet political updates 2026 Seeman questions healthcare privatization Seeman statement on health sector Tamil Nadu private medical colleges அரசு மருத்துவமனைகள் தரம் சீமான் காரசார கேள்வி சீமான் லேட்டஸ்ட் அறிக்கை சுகாதாரத்துறை தனியார்மயமாக்கல் தமிழக மருத்துவத்துறை உள்கட்டமைப்பு தமிழ்நாடு செய்திகள் 2026 நாம் தமிழர் கட்சி சீமான் பேட்டி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    கமல் சொன்ன வார்த்தை.. உதயநிதி கைதாகி விடுவிக்கப்பட்ட பின் நடந்த சம்பவம்..!

    August 6, 2026

    பாராட்டுனது போதும், பட்ஜெட்டை வாசிங்க.. முதல்வரைப் புகழும்போது எழுந்த அமளி..!

    August 6, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026

    07.08.2026 வெள்ளிக்கிழமைக்கான ராசிபலன்கள். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்குமான இன்றைய நட்சத்திர பலன்கள் மற்றும் பொதுவான பலன்கள்.

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.