தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில், தமிழகத்தின் 17 வது சட்டசபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
முதல் நபராக முதலமைச்சர் விஜய் பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏவாக பொறுப்பேற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து, மற்ற எம்எல்ஏக்களும் அடுத்தடுத்து பொறுப்பேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
முதலமைச்சர் விஜய் மற்றும் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.. தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வு..!
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் செய்த ஜோசப் விஜய்க்கு முன்னதாக ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கிய நிலையில், இதிலிருந்து இஸட் பிளஸ் பாதுகாப்பு மத்திய அரசால் தற்போது வழங்கப்பட்டுள்ளது. இதில் 55 மத்திய படை வீரர்கள் 24 மணி நேரம் முதலமைச்சருக்கு பாதுகாப்பு வழங்குவார்கள்.
இஸட் பிளஸ் பாதுகாப்பு என்பதை இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த அளவிலான பாதுகாப்பாகவும், இது பெரும்பாலும் முதலமைச்சர்கள் உயர்மட்ட அரசியல்வாதிகள் மற்றும் கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் முக்கிய பிரபலங்களுக்கு வழங்கப்படுகிறது. முதலமைச்சர் விஜய்க்கு புல்லட் பேரொபி கார்கள், பைலட் வாகனங்கள் மற்றும் 24×7 பாதுகாப்பும் இதில் அடங்கும். மேலும் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு ஹெக்லர் & கோச் MP5 துணை இயந்திரத் துப்பாக்கிகள் போன்ற நவீன ஆயுதங்கள் வழங்கப்படுகின்றன.

