சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. அதில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். அவருக்கு ஆளுநர் பதவி பதவி பிரமாணம் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அவருடன் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ், உள்ளிட்ட 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள விஜய் நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு காலை 8.45 மணியளவில் வந்தார். அவரை உயர் அதிகாரிகள் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றார். கருப்பு நிற பேண்ட், வெள்ளை நிற சட்டையுடன் பார்மல்சில் பக்காவாக அவர் வந்து இறங்கியது குறிப்பிடத்தக்கது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழ்நாட்டு முதல்வராகப் பொறுப்பேற்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கும், அவரது அமைச்சரவையினருக்கும் உளப்பூர்வமான வாழ்த்துகள்! திமுக-அதிமுக அல்லாத ஒரு கட்சி பல்லாண்டுகள் கழித்து தமிழகத்தை ஆளவிருப்பதில் மகிழ்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு முதல்வராகப் பொறுப்பேற்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கும், அவரது அமைச்சரவையினருக்கும் உளப்பூர்வமான வாழ்த்துகள்!
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) May 10, 2026
திமுக-அதிமுக அல்லாத ஒரு கட்சி பல்லாண்டுகள் கழித்து தமிழகத்தை ஆளவிருப்பதில் மகிழ்கிறேன்.@TVKVijayHQ

