தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றிய தமிழக வெற்றி கழகம் தனிப்பெருமாண்மை கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், முதலில் 5 எம்எல்ஏக்கள் கொண்ட காங்கிரஸ் நிபந்தனையுடன் ஆதரவு தெரிவித்திருந்தது.
இதை அடுத்து, பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில், தமிழக வெற்றி கழகம் ஈடுபட்டது. தங்களுக்கு ஆதரவு தருமாறு திமுக கூட்டணியில் இடம் பெற்ற விசிக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தமிழக வெற்றிக்கழகம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
மெஜாரிட்டி உறுதியானது.. வி.சி.க.வை தொடர்ந்து ஐ.யூஎம்.எல் ஆதரவு..!
இந்த அழைப்பை ஏற்று இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஐ.யூஎம்.எல் என நான்கு கட்சிகளும் விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவை கொடுப்பதாக அறிவித்துள்ளன. அதே சமயம், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கொடுக்கவில்லை என்றும், திமுக கூட்டணியில் தொடர்வதாகவும் அறிவித்துள்ளது.
இதனிடையில், விடுதலை சிறுத்தைகள், ஐ.யூஎம்.எல் கட்சி ஆதரவு வழங்கியது எம்எல்ஏ ஆதரவு எண்ணிக்கை 120 ஆக தமிழக வெற்றி கழகத்திற்கு உயர்ந்துள்ளது. இதையடுத்து, ஆட்சி அமைக்க உரிமை கோரி மீண்டும் ஆளுநரை சந்திக்க விஜய் நேரம் கேட்டுள்ள நிலையில் ஆளுநர் இன்று விஜய்க்கு ஆறு முப்பது மணிக்கு நேரம் ஒதுக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஆளுநரை சந்திக்க புறப்பட்டார்.
மேலும், ஆளுநர் கேரளா செல்ல இருந்த நிலையில் அவரின் கேரள பயணம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, இன்று மாலை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிக்கைக்கு சென்ற விஜய் பாதி வழியில் மீண்டும் பட்டினப்பாக்கத்திற்கே திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

