Close Menu
    What's Hot

    புதிய கூட்டணிக்கு அடித்தளமா?.. திருமாவளவனை நேரில் சந்திக்கும் விஜய்..!

    May 9, 2026

    வெள்ளக்காடாக மாறிய சாலைகள் – வாகன ஓட்டிகள் அவதி..!

    May 9, 2026

    தும்பிக்கையில் பலத்த தீக்காயம்.. பாதுகாப்பற்ற மின்கம்பிகளால் யானை பலி..!

    May 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»‘சில்லறை’ திருட்டு.. அதிகாலையில் ‘பால்’ திருடும் கணவன் – மனைவி..!
    கோவை

    ‘சில்லறை’ திருட்டு.. அதிகாலையில் ‘பால்’ திருடும் கணவன் – மனைவி..!

    Prime ReporterBy Prime ReporterMay 8, 2026Updated:May 8, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-couple-stole-milk-packets-cctv-viral
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads


    கோவை மாநகரில் அதிகாலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் உலா வரும் கணவன் – மனைவி ஜோடி, வீதிக்கு முன் இறக்கி வைக்கப்படும் பால் பாக்கெட்டுகளைத் திருடிச் செல்லும் வீடியோ வெளியாகி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    உழைப்பால் பிழைக்கும் பால் முகவர்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் அரங்கேறி உள்ள இந்தத் திருட்டுச் சம்பவம் சமூக வலைதளங்களில் ‘வைரல்’ ஆகி வருகிறது.​

    கோவை மாநகரின் பல்வேறு வீதிகளில் பால் முகவர்கள் அதிகாலையிலேயே பொதுமக்களுக்குப் பால் விநியோகம் செய்து வருகின்றனர். ஆவின் மற்றும் தனியார் நிறுவன பால் பாக்கெட்டுகள் பிளாஸ்டிக் ட்ரேக்களில் அடுக்கி, முகவர்கள் குறிப்பிடும் இடங்களில் வாகனங்கள் மூலம் இறக்கி வைக்கப்படுவது வழக்கம்.இந்நிலையில், இன்று அதிகாலை 3.32 மணி அளவில் கோவை கோவில்மேடு பகுதியில் உள்ள பால் முகவர் டேவிட் என்பவருக்குச் சொந்தமான பால் பாக்கெட்டுகள் அவரது கடையின் முன் இறக்கி வைக்கப்பட்டு இருந்தன.​

    அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கணவன் மற்றும் மனைவி, ஆள் நடமாட்டம் இல்லாததைச் சாதகமாக்கி வாகனத்தை நிறுத்தினர்.பின்னர், அடுக்கி வைக்கப்பட்டு இருந்த ட்ரேக்களில் இருந்து பால் பாக்கெட்டுகளைச் சாவகாசமாக எடுத்துத் தாங்கள் கொண்டு வந்த பைகளில் போட்டுக் கொண்டு அங்கிருந்து ‘எஸ்கேப்’ ஆகினர்.

    தடுத்தும் கேட்காத தந்தை.. கதறும் 7 வயது மகன்.. வெள்ளியங்கிரி சென்ற வாலிபர் பலி..!

    காலை எழுந்து பால் பாக்கெட்டுகளைச் சரிபார்த்த முகவர் டேவிட், எண்ணிக்கை குறைவாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அருகே இருந்த சி.சி.டி.வி (CCTV) கேமராவை பார்த்த போது, கணவன் – மனைவி இருவரும் கூட்டாகச் சேர்ந்து பால் பாக்கெட்டுகளைத் திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தது. ஒரு பாக்கெட்டிற்கு சில காசுகள் மட்டுமே கமிஷன் கிடைக்கும் நிலையில், இது போன்ற திருட்டுகளால் தங்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படுவதாக முகவர் டேவிட் வேதனையுடன் தெரிவித்து உள்ளார்.

    இந்தச் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது கோவையில் உள்ள அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் வைரலாகி வருவதோடு, இத்தகைய ‘சில்லறை’ திருடர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    CCTV Footage Viral Coimbatore Crime News Coimbatore Kovilmedu News Coimbatore Milk Theft Couple Stole Milk Packets Milk Agent Distress Strange Theft Case கணவன் மனைவி திருட்டு கோவை குற்றச் செய்திகள் கோவை கோவில்மேடு கோவை பால் திருட்டு சிசிடிவி கேமரா காட்சி நூதனத் திருட்டு பால் முகவர் வேதனை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வெள்ளக்காடாக மாறிய சாலைகள் – வாகன ஓட்டிகள் அவதி..!

    May 9, 2026

    தும்பிக்கையில் பலத்த தீக்காயம்.. பாதுகாப்பற்ற மின்கம்பிகளால் யானை பலி..!

    May 9, 2026

    தடுத்தும் கேட்காத தந்தை.. கதறும் 7 வயது மகன்.. வெள்ளியங்கிரி சென்ற வாலிபர் பலி..!

    May 8, 2026

    ஜவுளித் துறைக்கு பேராபத்து.. ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க அரசு செய்ய வேண்டிய மாற்றங்கள்…!

    May 7, 2026

    திமுகவின் தேர்தல் தோல்வி.. பதவிக்காலம் இருந்தும் ராஜினாமா செய்த நலவாரிய தலைவர்..!

    May 7, 2026

    விஜய்யுடன் கைகோர்த்த காங்கிரஸ்.. பட்டாசு வெடித்து கூட்டணியை வரவேற்ற தொண்டர்கள்..!

    May 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வெள்ளக்காடாக மாறிய சாலைகள் – வாகன ஓட்டிகள் அவதி..!

    May 9, 2026

    தும்பிக்கையில் பலத்த தீக்காயம்.. பாதுகாப்பற்ற மின்கம்பிகளால் யானை பலி..!

    May 9, 2026

    புதிய கூட்டணிக்கு அடித்தளமா?.. திருமாவளவனை நேரில் சந்திக்கும் விஜய்..!

    May 9, 2026

    மேஜிக் நம்பரை எட்டிய TVK.. மெஜாரிட்டியை தாண்டி ஆளுநரை சந்தித்த விஜய்..!

    May 8, 2026

    காங்கிரஸ் நிர்வாகி வெட்டிப் படுகொலை.. செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

    May 8, 2026
    Don't Miss

    புதிய கூட்டணிக்கு அடித்தளமா?.. திருமாவளவனை நேரில் சந்திக்கும் விஜய்..!

    May 9, 2026

    தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சந்திக்கிறார். தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சந்திப்பின் பின்னணி இதோ.

    வெள்ளக்காடாக மாறிய சாலைகள் – வாகன ஓட்டிகள் அவதி..!

    May 9, 2026

    தும்பிக்கையில் பலத்த தீக்காயம்.. பாதுகாப்பற்ற மின்கம்பிகளால் யானை பலி..!

    May 9, 2026

    மே 9: மேஷம் முதல் மீனம் வரை; அதிர்ஷ்டம் யாருக்கு? சவால்கள் யாருக்கு?

    May 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.