தமிழகமே இந்த தேர்தல் முடிவுக்காக காத்திருக்கும் நிலையில் ஏப்ரல் 23ஆம் தேதி பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. அதில், யார் ஆட்சியை கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது.
காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இப்படி தமிழகமே வாக்கு எண்ணிக்கையில் பரபரப்பாக இருக்கும் நிலையில், நடிகை திரிஷா தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக நேற்று இரவு திருப்பதிக்கு காரில் செல்லும் வீடியோவை வெளியிட்டு இருந்தார்.
“மீண்டும் ஸ்டாலின்” முழக்கத்தால் அதிரும் சென்னை.. திமுக கொண்டாட்டம் தொடக்கம்..!
இதையடுத்து, அதிகாலை 7 மணிக்கு தரிசனம் செய்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ளது. 43 வது பிறந்த நாளை கொண்டாடி வரும் த்ரிஷாவிற்கு ரசிகர்கள் திரைதுறையினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஏழுமலையானே 🙏🏾
— Priyan – சண்முகபிரியன் சிவலிங்கம் (@Priyan_reports) May 4, 2026
திருப்பதியில் நடிகை த்ரிஷா சாமி தரிசனம்..!#Trisha #ElectionResults #JudgementDay #Election2026 pic.twitter.com/gPQVOnlz7H

