சூர்யா நடிப்பில் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படம் மீது ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளதுடன், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த திரைப்படம் வருகிற மே 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்து வருகிறார்கள்.
மே தொடங்கிடுச்சு.. சர்ச்சைகளுக்கு நடுவில் த்ரிஷா போட்ட அதிரடி போஸ்ட்..!

இந்த நிலையில், கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. மிகவும் பிரமாண்டமாக நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சியில், சூர்யா, ஆர்ஜே பாலாஜி உட்பட முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். படத்தின் ஹீரோயின் ஆன நடிகை திரிஷா மட்டும் வரவில்லை. அது பெரிய பேசுபொருள் ஆனது.

த்ரிஷாவிற்கும் படக்குழுவிற்கும் இருக்கும் பிரச்சினை திரிஷாவின் பதிவால் தற்போது உறுதியாகியிருக்கிறது. அதாவது, ஆடியோ லான்ச்சுக்கு போகாதது ஏன் என ஒருவர் கேட்க த்ரிஷா அதற்கு பதில் கொடுத்துள்ளார்.
அதில், எனக்கு அழைப்பே வரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்போது த்ரிஷாவிற்கு மட்டும் தனியாக டீசர் வெளியிட்டு இருக்கும் நிலையில், அதற்கு நன்றி என கமெண்ட் செய்திருக்கிறார். அதற்கு நெட்டிசன் ஒருவர் ‘த்ரிஷா படத்தில் இருப்பதையே மறந்துவிட்டேன்’ என கமெண்ட் செய்திருக்கிறார். அதற்கு த்ரிஷா நானும் மறந்து விட்டேன். இப்போதாவது, அவர்கள் ரிமைண்டர் செட் செய்தார்களோ என பதிவிட்டுள்ளார்.


