Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆன்மிகம்»90’ஸ் கிட்ஸா நீங்க.. திருமணத் தடை நீங்கும் ‘இந்த’ கோயிலுக்கு போயிட்டு வாங்க..!
    ஆன்மிகம்

    90’ஸ் கிட்ஸா நீங்க.. திருமணத் தடை நீங்கும் ‘இந்த’ கோயிலுக்கு போயிட்டு வாங்க..!

    Prime ReporterBy Prime ReporterApril 28, 2026Updated:April 28, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Sathyamangalam Venugopala Swamy Temple history details
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோயில் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இக்கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்று கருதப்படுகிறது. கொங்கு நாட்டின் முக்கியமான வைணவ தளங்களில் ஒன்று.

    Sathyamangalam Venugopala Swamy Temple history details

    இக்கோவிலின் தூண்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் உலகப் புகழ்பெற்றுவையாக கருதப்படுகிறது. குறிப்பாக, ஒரே கல்லில் செதுக்கப்பட்ட யாழி சிற்பங்கள் மற்றும் தசாவதார சிலைகள் கட்டிடக்கலைக்கு சான்றாக இங்கு விளங்குகின்றன. ஸ்ரீ வேணுகோபால சுவாமி பாமா மற்றும் ருக்மணியுடன் நின்ற கோலத்தில் புல்லாங்குழல் ஏந்தியவாறு இத்திருத்தலத்தில் பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார்.

    சொத்து வழக்குகளில் வெற்றி தரும் ‘வழிவிடு முருகன்’.. சனிதோஷம் நீக்கும் அற்புத தலம்..!

    இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமர்சியாகவும், சிறப்பாகவும் கொண்டாடப்படுகிறது. சொர்க்கவாசல் திறப்பின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருவார்கள். கிருஷ்ணரின் அவதார தினம் என்பதால் உறியடி உற்சவம் மற்றும் சிறப்பு பூஜைகள் இத்தளத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

    Sathyamangalam Venugopala Swamy Temple history details

    சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். புரட்டாசி சனிக்கிழமைகளில் இந்த ஊர் மக்கள் அனைவரும் திரண்டு வந்து, நெய் தீபங்கள் ஏற்றி வழிபடுவார்கள். இக்கோயிலின் தூண்களில் கிருஷ்ணர் தீய சக்திகளை அழிக்கும் பல லீலைகள் (உதாரணமாக காளிங்க நர்த்தனம்) நுணுக்கமாகச் செதுக்கப்பட்டுள்ளன. இது பக்தர்களுக்குத் தைரியத்தையும், எதிரிகள் பயம் நீங்குவதையும் தருவதாக நம்பப்படுகிறது.

    Sathyamangalam Venugopala Swamy Temple history details

    கோவில் பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ளதால் மாலை நேரங்களில் மிகவும் அமைதியான மற்றும் தெய்வீகமான சூழல் எங்கு நிலவுவது இந்த கோவிலின் சிறப்பு. இந்தக் கோயில் அதன் சிற்பங்களுக்காக ‘தென்னகத்தின் ஹேளபீடு’ என்றும் சிலரால் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    குழந்தை வரம் மற்றும் திருமண பாக்கியம்

    சந்தான பாக்கியம்

    குழந்தை வரம் வேண்டுபவர்கள் இங்குள்ள வேணுகோபால சுவாமிக்கு வெண்ணெய் காப்பு சாத்தி, மனமுருகி வேண்டிக்கொண்டால் புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.

    திருமணத் தடை நீங்க

    பாமா மற்றும் ருக்மணி தாயாருடன் சுவாமி அருள்பாலிப்பதால், திருமணத் தடையால் அவதிப்படுபவர்கள் இங்கு வந்து துளசி மாலை சாத்தி வழிபட்டால் விரைவில் சுப காரியங்கள் கைகூடும் என்று நம்பப்படுகிறது.

    Sathyamangalam Venugopala Swamy Temple history details

    கல்வி மற்றும் கலை ஞானம்

    வேணுகோபாலர் இசைக்கு அதிபதியாகக் கருதப்படுவதால், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும், இசை மற்றும் கலைகளில் ஆர்வம் உள்ளவர்கள் மேன்மை அடையவும் இவரை வணங்குவது சிறப்பு.

    சிற்பங்களில் உறையும் தெய்வீகம்

    இக்கோயிலின் தூண்களில் உள்ள சிற்பங்கள் வெறும் கல்லால் ஆனவை அல்ல; அவை ஒவ்வொன்றும் ஒரு கதையைச் சொல்லும். குறிப்பாக:

    யாழி சிற்பங்கள்

    தீய சக்திகள் உள்ளே நுழையாதபடி காக்கும் காவலர்களாகக் கருதப்படும் யாழிகளின் சிற்பங்கள் இங்கு மிக பிரம்மாண்டமாக இருக்கும்.

    Sathyamangalam Venugopala Swamy Temple history details

    தசாவதாரம்

    மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களும் மிகத் தெளிவாகச் செதுக்கப்பட்டு, பக்தர்களுக்கு விஷ்ணுவின் முழுமையான அருளை ஒரே இடத்தில் வழங்குகின்றன.

    சிறப்பு

    இங்கு கிருஷ்ணர் வேணுகோபாலராக (புல்லாங்குழல் ஏந்தியவாறு) காட்சியளிக்கிறார். இக்கோயிலின் தூண்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் மிகவும் நுணுக்கமானவை மற்றும் அழகானவை.

    Sathyamangalam Venugopala Swamy Temple history details

    தரிசன நேரம்

    • காலை: 7:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை.
    • மாலை: 5:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை. (விசேஷ நாட்களில் நடை திறந்திருக்கும் நேரம் மாற்றத்திற்கு உட்பட்டது).

    சத்தியமங்கலம் வனப்பகுதி மற்றும் பவானிசாகர் அணைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இந்தத் தலத்திற்குத் தவறாமல் வந்து செல்வார்கள்.

    முகவரி: ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயில், கோபாலபுரம், சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம் – 638401.

    Bhavani River Coimbatore News Erode Spirituality Krishna Temple Sathyamangalam Tamil Nadu Temples Venugopala Swamy Temple ஈரோடு ஆன்மீகம் கிருஷ்ணர் கோயில் கோயம்புத்தூர் செய்திகள் சத்தியமங்கலம் தமிழகக் கோயில்கள் பவானி ஆறு வேணுகோபால சுவாமி கோயில்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    துளசி மாடத்தில் சங்கு வைப்பதன் ரகசியம் என்ன? ஆன்மிகத் தகவல்கள்!

    August 24, 2026

    செவ்வாய் தோஷம் நீங்கவும், சஷ்டி விரத பலன்கள் பெறவும் முருகப்பெருமான் வழிபாட்டின் மகத்துவம்..!

    August 17, 2026

    ஆடி பெருக்கு: தாலி கயிறு மாற்ற சூப்பர் டைமிங் இதுதான்.. மிஸ் பண்ணிடாதீங்க..!

    August 3, 2026

    ஆடி பெருக்கு.. மஞ்சள் கயிறு மாற்ற ஏற்ற நல்ல நேரம்..!

    August 1, 2026

    ராகு-கேது தோஷம் நீங்க.. நாக பஞ்சமி திருநாளின் ஆன்மீகச் சிறப்புகள்..!

    July 29, 2026

    செவ்வாய், வெள்ளியில் பூஜை பாத்திரங்களை துலக்கலாமா? ஆன்மீகத்தின் தெளிவான விளக்கங்கள்..!

    July 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.