கோவை மாவட்டம், சுலூர் ஜீவா நகரைச் சேர்ந்த வெங்காய வியாபாரி குமார் (63), தனது வீட்டைப் பூட்டிவிட்டு நேற்று மதியம் மனைவியுடன் வியாபாரத்திற்காக வெளியே சென்றார். நள்ளிரவு 12.15 மணியளவில் குமார் மட்டும் வீட்டிற்குத் திரும்பியபோது, மின்விளக்குகள் அணைக்கப்பட்ட நிலையில் வீட்டினுள் மர்ம நபர்கள் இருவர் நின்று கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
“அம்மா.. அம்மா”.. தாயை தேடி சாலையோரம் அலைந்து திரியும் குட்டி யானை..!
குமார் சத்தமிட்டதும், அந்த நபர்கள் வீட்டின் வெளிக்கதவு வழியாகத் தப்பிச் சென்று, பின்பக்க காம்பவுண்ட் சுவரைக் குதித்து ஓடிவிட்டனர். உடனடியாகக் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துச் சோதனையிட்டதில், வீட்டின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 27 கிராம் எடையுள்ள தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.70,000 ஆகும்.
இந்தச் சம்பவம் குறித்து குமார் சுலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து,மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

