Close Menu
    What's Hot

    இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்கள் 1.43 லட்சம் — 30.2% வளர்ச்சி; தமிழ்நாடு முதலிடம், உலகில் 6-வது இடம்

    April 21, 2026

    கொளுத்துற வெயிலுக்கு குளுகுளு ட்ரீட்.. சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே தயார்..!

    April 21, 2026

    அக்னி நட்சத்திரத்தை சமாளிக்கணுமா?.. உடலை நீரேற்றத்துடன் வைக்கும் சிறந்த காய்கறிகள்..!

    April 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»ஊருக்கு போறீங்களா?.. 3 நாள் ஆனாலும் கெடாது; பயணங்களுக்கு ஏற்ற ‘கட்டு சோறு’ ரகசியம் இதோ..!
    சமையல்

    ஊருக்கு போறீங்களா?.. 3 நாள் ஆனாலும் கெடாது; பயணங்களுக்கு ஏற்ற ‘கட்டு சோறு’ ரகசியம் இதோ..!

    Prime ReporterBy Prime ReporterMarch 8, 2026Updated:March 8, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    puli sadam UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஊருக்குப் போகும்போது ட்ரெயின்ல இல்லனா பஸ்ல சாப்பிடுவதற்கு ‘கட்டு சோறு’ (Travel Food) ஒரு வரப்பிரசாதம். சீக்கிரம் கெட்டுப்போகாமல், அதே சமயம் ருசி குறையாமல் இருக்கும்.

    பொதுவா நம்ம எத்தனையோ முறை வீட்டில் புளியோதரை செஞ்சிருப்போம். பாக்கெட் மசாலா முதல் பாட்டி சொன்ன ரெசிபி வர எல்லாமே ட்ரை பண்ணி பார்த்து இருப்போம். ஆனால், கோவிலில் கொடுக்கக்கூடிய அந்த புளியோதரை ருசி தனியா தெரியும். நல்லெண்ணையின் வாசனையில் இருக்கும் சாதம் ஒன்றோடு ஒன்று சேராமல் உதிரி உதிரியாகவும், அதே சமயத்துல மசாலா சாதத்தோடு ஊரியும் இருக்கணும். அதை எப்படி பாரம்பரிய முறைப்படி கட்டுசோறு செய்யலாம்னு இந்த பதிவில் பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    சாதத்திற்கு

    • இரண்டு கப் பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி
    • 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
    • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
    • உப்பு தேவைக்கேற்ப

    புளிக்காய்ச்சல்

    • ஒரு பெரிய எலுமிச்சை அளவு பழைய புளி
    • அரை கப் நல்லெண்ணெய்
    • ஒரு டீஸ்பூன் கடுகு
    • இரண்டு டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு
    • ஒரு டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
    • 1/2 கப் வேர்க்கடலை
    • 8 முதல் 10 காய்ந்த மிளகாய்
    • இரண்டு கொத்து கருவேப்பிலை
    • அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள்
    • ஒரு சிறிய துண்டு வெல்லம்

    சீக்ரெட் மசாலா

    • அரை டீஸ்பூன் வெந்தயம்
    • அரை டீஸ்பூன் மிளகு
    • 2 டீஸ்பூன் தனியா
    • ஒரு டீஸ்பூன் எள்

    செய்முறை

    puli sadam UTV

    Step 1: முதலில் அரிசியை நன்றாக கழுவி சாதத்தை வடித்துக் கொள்ள வேண்டும். சாதம் குழைந்து விடக்கூடாது. உதிரி உதிரியாக இருக்க வேண்டும். அதற்கு, அகலமான பாத்திரத்தில் கொட்டி அதில், இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மெதுவாக கிளறி ஆற விடவும். சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க இது உதவும்.

    Step 2: பின்னர் ஒரு வெறும் வானொலியில் வெந்தயம், மிளகு, தனியா மற்றும் எள் ஆகியவற்றை தனித்தனியாக போட்டு சிவக்க வறுத்து எடுத்து கருகிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆறியதும், இதனை மிக்ஸி அல்லது ஆட்டுக்கல்லில் நைசாக பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    Step 3: வானொலியில் தாராளமாக நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கும் பருப்புகள் பொன்னிறமானதும், கரைத்து வைத்துள்ள கெட்டியான புளி கரைசலை உற்றவும். இதோடு உப்பு, பெருங்காயத்தூள் மற்றும் மஞ்சத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

    Step 4: பச்சை வாசனை போய் எண்ணெய் திரிந்து மேலே மிதந்து வரும் வரை கொதிக்க வேண்டும். இந்த நேரத்தில், சிறிய துண்டு வெல்லத்தை சேர்க்க இது புளிப்பு, காரம், உப்பு மூன்றையும் சமன் செய்யும். புளிக்கரைசல் கெட்டியாக தொக்கு பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

    Step 5: இப்போது, ஆறவைத்த சாதத்தின் மேல் தேவையான அளவு புளிக் கரைச்சலை உற்றி, பிறகு நாம் அரைத்து வைத்துள்ள வறுத்த பொடியை இரண்டு டீஸ்பூன் மேலே தூவவும். அதோடு, சிறிது பச்சை கருவேப்பிலை மற்றும் ஒரு டீஸ்பூன் பச்சை நல்லெண்ணெய் ஊற்றி சாதத்தை மெதுவாக கிளறவும், கிளறிய உடனே சாப்பிடுவதற்கு குறைந்தது 2 மணி நேரம் ஊற விட்டு சாப்பிட்டால் தான் அந்த கட்டுசோறு ருசி தெரியும்.

    Step 6: சாதம் புளியை நன்கு இழுத்துக்கொண்டு, சாப்பிட அமிர்தமாக இருக்கும். இதை வாழை இலையில் கட்டி வைத்தால், 3 நாட்கள் ஆனாலும், கெடாது. டிராவல் டைமுக்கு இதுதான் பெஸ்ட்.

    Katti soru recipes Tamil Long lasting rice recipes Puliyogare for travel tips Traditional travel food India Travel food recipes Tamil Variety rice for long travel கட்டு சோறு கெடாத சாதம் வகைகள் பயணத்திற்கான கட்டிச் சோறு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கொளுத்துற வெயிலுக்கு குளுகுளு ட்ரீட்.. சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே தயார்..!

    April 21, 2026

    சளி, இருமலுக்கு உடனடி தீர்வு.. உடலின் நச்சுக்களை நீக்கும் “லெமன் கிராஸ் ரசம்”..!

    April 20, 2026

    நாவூறும் ‘கிரீமி’ தயிர் சாதம் இனி வீட்டிலேயே செய்யலாம்.. இதோ சீக்ரெட் டிப்ஸ்..!

    April 18, 2026

    சுடச் சுட சாதத்திற்கு ‘சுட்ட மாங்காய் ரசம்’ – ஸ்மோக்கி பிளேவருடன் அசத்தல்..!

    April 17, 2026

    வாய் புண்ணுக்கு அருமருந்து.. சத்துக்கள் நிறைந்த ‘மணத்தக்காளி’ சட்னி..!

    April 15, 2026

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க.. வெயிலுக்கு இதமான கம்பு கூழ்..!

    April 11, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்கள் 1.43 லட்சம் — 30.2% வளர்ச்சி; தமிழ்நாடு முதலிடம், உலகில் 6-வது இடம்

    April 21, 2026

    கொளுத்துற வெயிலுக்கு குளுகுளு ட்ரீட்.. சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே தயார்..!

    April 21, 2026

    அக்னி நட்சத்திரத்தை சமாளிக்கணுமா?.. உடலை நீரேற்றத்துடன் வைக்கும் சிறந்த காய்கறிகள்..!

    April 21, 2026

    DRDO-வின் AI செயற்கைக்கோள் அமைப்பு “ப்ரஜ்ஞா” MHA-விடம் ஒப்படைப்பு — எல்லைக் கண்காணிப்பில் புதிய சகாப்தம்

    April 21, 2026

    ரந்தம்பூரில் வரலாற்று அரிய காட்சி: புலி, சிறுத்தை, சீட்டா ஒரே இடத்தில் — KP-2 சீட்டா 500 கி.மீ பயணித்து குனோவிலிருந்து வந்தது

    April 21, 2026
    Don't Miss

    இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்கள் 1.43 லட்சம் — 30.2% வளர்ச்சி; தமிழ்நாடு முதலிடம், உலகில் 6-வது இடம்

    April 21, 2026

    2025-26-ல் இந்தியாவின் காப்புரிமை விண்ணப்பங்கள் 1,43,729 ஆக உயர்வு; 30.2% வளர்ச்சி. 69% உள்நாட்டினர் தாக்கல். தமிழ்நாடு முதலிடம். இந்தியா உலகில் 6-வது பெரிய patent நாடு.

    கொளுத்துற வெயிலுக்கு குளுகுளு ட்ரீட்.. சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே தயார்..!

    April 21, 2026

    அக்னி நட்சத்திரத்தை சமாளிக்கணுமா?.. உடலை நீரேற்றத்துடன் வைக்கும் சிறந்த காய்கறிகள்..!

    April 21, 2026

    DRDO-வின் AI செயற்கைக்கோள் அமைப்பு “ப்ரஜ்ஞா” MHA-விடம் ஒப்படைப்பு — எல்லைக் கண்காணிப்பில் புதிய சகாப்தம்

    April 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.