பிக்பாஸ் நிகழ்ச்சியின் சமீபத்திய வார இறுதி எபிசோடில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “தலைவர் என்றால் என்னவென்று தெரியாமல், தலைமையின் பொறுப்பை உணராமல், வாக்குறுதிகளை அள்ளி வழங்கிவிட்டு, பிரச்சனை என்று வரும்போது எதிரணி மீது பழிபோட்டுவிட்டுத் தெறித்து ஓடுவது தலைமைக்கான தகுதி கிடையாது; அது ஏமாற்று வேலை” எனத் தெரிவித்திருந்தார்.
இவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் அரசியல் வட்டாரத்திலும், குறிப்பாகத் தவெக தரப்பினரிடையேயும் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சி தரப்பிலிருந்து விளக்கம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “பிக்பாஸ் சீசன் 10 என்பது முற்றிலும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டுமே.
ஒரே கேலரியில் விஜய்யும் திரிஷாவும்.. சோசியல் மீடியாவில் விவாதம்..!
இதில் இடம்பெறும் உரையாடல்களும் கருத்துகளும் அந்த விளையாட்டுச் சூழலுக்கு உட்பட்டவை மட்டுமே தவிர, அவற்றை நிகழ்ச்சிக்கு வெளியே உள்ள எந்தவொரு நபர், அமைப்பு, சித்தாந்தம் அல்லது சூழ்நிலைகளுடன் தொடர்புபடுத்திப் பார்க்கக் கூடாது” எனத் தெளிவாகத் குறிப்பிடப்பட்டுள்ளது.

