தமிழ்நாடு முழுவதும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் உள்ளிட்ட 35 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் மாநில அரசின் முழுப் பங்களிப்பில் பயன்பெறும் 15,56,674 பயனாளிகளுக்கு உரிய காலத்தில் வங்கிக் கணக்கில் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் புதிய வழிகாட்டுதலின்படி, தேசிய சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் (இந்திரா காந்தி தேசிய முதியோர்/விதவையர்/மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டங்கள்) கீழ் நிதி வழங்கும் முறை மாற்றப்பட்டு வருகிறது.
இடைத்தேர்தல் களம் சூடுபிடிப்பு: தவெக தரப்பில் அதிரடி தேர்தல் பணிக்குழு அறிவிப்பு..!
அதன்படி, செப்டம்பர் மாதத்திற்கான ஓய்வூதியத் தொகையை ‘SNA-SPARSH’ என்னும் புதிய மத்திய-மாநில ஒருங்கிணைந்த நிதிப் பரிமாற்ற தளம் மூலமாகச் செலுத்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், சில தேசிய திட்டப் பயனாளிகளுக்குத் தொகையை வரவு வைப்பதில் தற்காலிகச் செயல்முறைத் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தொழில்நுட்ப மாற்றம் மற்றும் புதிய தளம் வழியாக நிதியை விடுவிக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, அனைத்துத் தகுதியான பயனாளிகளுக்கும் விடுபட்ட ஓய்வூதியத் தொகை உடனடியாகத் தடையின்றி வழங்கப்படும் எனச் செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலமாகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

