கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமாரவேல் (மதுராந்தகம்) மற்றும் பி. சத்தியபாமா (தாராபுரம்) ஆகிய இருவரும், தேர்தல் முடிவுகள் வெளியாகிச் சில நாட்களிலேயே தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவளிக்கும் வகையில் அவர்கள் அதிமுகவிலிருந்து விலகித் தவெகவில் இணைந்ததால் ஏற்பட்ட காலி இடங்களினாலேயே இந்த அக்டோபர் 6 இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முடக்குகிறதா அரசு?.. நயினார் நாகேந்திரன் கண்டனம்..!
மதுராந்தகம் தொகுதியில் தவெகவின் துணைப் பொதுச் செயலாளரான மரகதம் குமாரவேல் மீண்டும் போட்டியிடுகிறார். தாராபுரம் தொகுதியில் தவெகவின் திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளரான பி. சத்தியபாமா வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டுள்ளார். இவர்களுக்குக் காங்கிரஸ், விசிக, மமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆதரவளிக்கின்றன.
திமுக தரப்பில் மதுராந்தகத்தில் ஐ. பரந்தாமனும், தாராபுரத்தில் எஸ். சுகன்யாவும் போட்டியிடுகின்றனர். அதிமுக தரப்பில் கனிதா சம்பத் மற்றும் கே. பானுமதி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இத்தேர்தல் மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது.

