Close Menu
    What's Hot

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»காயத்துடன் கோத்தகிரி சாலையில் உலா வந்த பாகுபலி யானை.. வனத்துறையினர் தீவிர சிகிச்சை..!
    கோவை

    காயத்துடன் கோத்தகிரி சாலையில் உலா வந்த பாகுபலி யானை.. வனத்துறையினர் தீவிர சிகிச்சை..!

    Prime ReporterBy Prime ReporterSeptember 10, 2026Updated:September 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    injured-baahubali-elephant-treatment-mettupalayam-forest-department
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான தேக்கம்பட்டி, தாசம்பாளையம், நெல்லித்துறை, ஓடந்துறை, பாலப்பட்டி, வச்சினம்பாளையம், சிறுமுகை, லிங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே “பாகுபலி” என மக்களால் செல்லமாக அழைக்கப்படும் ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் இருந்து வருகிறது.

    இந்த யானை பகல் வேளைகளில் அடர்ந்த வனப்பகுதிக்குள்ளும்,இரவு வேளைகளில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களில் முகாமிட்டு தொடர்ந்து பயிர்களை சேதம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளது. இதுவரை மனிதர்கள் எவரையும் தாக்கவோ,தாக்க முயற்சிக்கவோ இல்லை என்றாலும்,தொடர்ந்து இந்த யானை விளைநிலங்களில் முகாமிட்டு பயிர்களை சேதம் செய்வதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் மற்றொரு காட்டு யானையுடன் ஏற்பட்ட மோதலில் பாகுபலி யானையின் வால் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
    இதனையறிந்த மேட்டுப்பாளையம் வனச்சரகர் சசிகுமார் தலைமையிலான வனத்துறையினர் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபுவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து வனக்கால்நடை மருத்துவர் விஜயராகவன் தலைமையிலான குழுவினர் வால் பகுதியில் காயம்பட்ட பாகுபலி யானைக்கு சிகிச்சை மேற்கொண்டு தொடர்ந்து அதனை கண்காணித்து வருகின்றனர்.

    சர்வதேச சந்தையில் கொடிகட்டிப் பறக்கும் இந்திய ஏலக்காய்.. கிடுகிடுவென உயரும் ஏற்றுமதி..!

    இதனிடையே நேற்று காலை வேளையில் பாகுபலி யானை கோத்தகிரி சாலையில் உலா வந்தது.திடீரென சாலையின் குறுக்கே யானை நிற்பதை கண்ட வாகன ஓட்டிகள் சாலையின் இருபுறமும் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு யானை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.நீண்ட நேரம் அங்கு நின்றிருந்த யானை பின் தானாக வனப்பகுதிக்குள் சென்றது.இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

    இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறுகையில் “கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் மற்றொரு காட்டு யானையுடன் ஏற்பட்ட மோதலில் பாகுபலி யானையின் வால் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து அறிந்தவுடன் வனச்சரகர் சசிகுமார் மற்றும் வனக்கால்நடை மருத்துவர் விஜயராகவன் தலைமையிலான குழுவினர் பாகுபலி யானை விரும்பி உண்ணும் களி உருண்டையில் நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் காயத்தை குணமாக்கும் மாத்திரைகளை வைத்து யானை செல்லும் வழித்தடங்களில் வைத்தனர்.

    தொடர்ந்து அந்த யானை அதனை சாப்பிட்டு சென்றுள்ளது. நேற்று முன்தினம் கூட பாகுபலி யானையின் கூடவே மேலும் இரு யானைகள் சுற்றி வந்துள்ளது. தற்போது பாகுபலி யானையின் வால் பகுதியில் ஏற்பட்ட காயம் மெதுவாக குணமடைந்து வருகிறது.எனினும்,அந்த காயம் குணமாகும் வரை வனக்கால்நடை மருத்துவர் விஜயராகவன் தலைமையிலான மருத்துவ குழுவினர் தொடர்ந்து அந்த யானையை கண்காணித்து வருகின்றனர்” என்றார்.

    Baahubali wild elephant Mettupalayam Forest department treatment injured elephant Injured Baahubali elephant Mettupalayam Mettupalayam forest ranger Sasikumar 2026 Tamil Nadu forest department elephant treatment பாகுபலி யானைக்கு சிகிச்சை மேட்டுப்பாளையம் பாகுபலி யானை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026

    விஜய் சேதுபதிக்கு இப்போ நேரம் சரியில்ல.. எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் ஆருடம்..!

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Don't Miss

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    வெளிநாட்டு நிகழ்வில் அரசியல் பெரும்புள்ளியுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை வேண்டுமென்றே கலந்துகொண்டு சேட்டை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.