அரசு மருத்துவமனைகளில் குழந்தை பிறப்பை அதிகரிக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம், பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய நிலவரப்படி அந்நாளில் இத்திட்டம் தொடங்கப்பட வாய்ப்பில்லை எனத் தெரியவந்துள்ளது.
முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் செல்லவுள்ளதே இத்திட்டம் தள்ளிப்போவதற்கான முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. துபாய் வழியாக லண்டன் செல்லும் அவர், அங்கு சில்வர்ஸ்டோனில் நடைபெறும் நடிகர் அஜித்குமாரின் கார் பந்தயத்தையும் கண்டுகளிக்கவுள்ளார். இந்தப் பயணம் செப்டம்பர் 16 வரை 7 நாட்கள் நீடிக்கும் என்பதால், செப்டம்பர் 15 அன்று அவரால் திட்டத்தைத் தொடங்கிவைக்க இயலாது.
விவசாயிகளின் வாழ்வாதாரமே முக்கியம்.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை..!
முதல்-அமைச்சர் சென்னை திரும்பிய பின்னர், செப்டம்பர் 25-ம் தேதி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உசிலம்பட்டி பகுதியில் தாய்மாமன் சீர் வழங்கும் பழக்கம் பிரபலம் என்பதால் இந்த ஊர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 17-ம் தேதி விருதுநகரில் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தையும் அவர் தொடங்கிவைக்க உள்ளார்.

