Close Menu
    What's Hot

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»13 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நாசம்.. அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!
    தமிழ்நாடு

    13 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நாசம்.. அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

    Prime ReporterBy Prime ReporterSeptember 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    anbumani-ramadoss-slams-govt-13-lakh-paddy-bags-damaged-rain
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது,

    செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் 13 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்: நிரந்தரக் கிடங்குகளை விரைந்து அமைக்க வேண்டும்! செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு திறந்தவெளி கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 13 லட்சம் நெல் மூட்டைகள் கடந்த சில நாள்களில் பெய்த மழையில் நனைந்து சேதமடைந்திருக்கின்றன. அவற்றில் பல்லாயிரம் நெல் மூட்டைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு அழுகி விட்டன.

    பலமுறை தொடர்ந்து வலியுறுத்தியும் விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல் மூட்டைகளை அரசு நிர்வாகம் பொறுப்பின்றி மழையில் நனைய விட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு சமத்துவபுரத்திற்கு எதிரில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளிக் கிடங்கில் 50 ஆயிரம் டன், அதாவது 12.50 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்து விட்டன.

    அதே செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த புள்ளேரி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளிக் கிடங்கிலும் பல்லாயிரம் நெல் மூட்டைகள் சேதமடைந்து விட்டன. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த இராஜேந்திரன்பட்டினம் பகுதியில் உள்ள திறந்தவெளிக் கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து விட்டன.

    மழையில் நனைந்து சேதமடைந்த நெல் மூட்டைகள் அனைத்தும் நேற்றோ அதற்கு முதல் நாளோ கொள்முதல் செய்யப்பட்டவை அல்ல. பல வாரங்களுக்கு முன் கொள்முதல் செய்யப்பட்டு சேமித்து வைக்கப்பட்டவை தான். அவை உரிய காலத்தில் கிடங்குகளுக்கோ, அரவை ஆலைகளுக்கோ கொண்டு செல்லப்பட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உரிய காலத்தில் அங்கிருந்து அகற்றாத அரசு தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

    வழக்கமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை அங்கிருந்து கிடங்குகளுக்கும், கிடங்குகளில் இருந்து அரவை ஆலைகளுக்கும் அனுப்பும் பணி சங்கிலித் தொடர் போல நடைபெற வேண்டும். ஆனால், இந்த சங்கிலித் தொடர் அறுபட்டு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைகின்றன.

    இந்த சிக்கலுக்கு ஒரே தீர்வு கிடங்குகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது தான். தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 80 லட்சம் டன் நெல் உள்பட மொத்தம் 120 லட்சம் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றில் அதிகபட்சமாக 2025-26ஆம் ஆண்டில் வரலாறு காணாத வகையில் 65 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், நெல் கொள்முதலை மேற்கொள்ளும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் வெறும் 18 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகள் தான் உள்ளன.

    இது தமிழ்நாட்டில் விளையும் உணவு தானியங்களில் வெறும் 15% மட்டும் தான். இது போதுமானதல்ல. மழையில் நனைந்து சேதமடைந்த நெல் மூட்டைகளை பயன்படுத்த முடியாது. அவற்றை அரவை செய்து நியாயவிலைக் கடைகளில் வழங்கினால் துர்நாற்றம் எடுத்து பயன்படுத்த முடியாத நிலையில் தான் இருக்கும்.

    இதனால் மக்கள் வரிப்பணம் தான் வீணாகும். நெல் மூட்டைகள் வீணாவதைத் தடுக்க கிடங்குகளை அதிகப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுவரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசாவது கிடங்குகளை கட்டி நெல் மூட்டைகள் வீணாகாமல் தடுக்க வேண்டும். @CMOTamilnadu

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் 13 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்: நிரந்தரக் கிடங்குகளை விரைந்து அமைக்க வேண்டும்!

    செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு திறந்தவெளி கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 13 லட்சம்…

    — Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) September 8, 2026
    Anbumani Ramadoss paddy bags rain damage Anbumani Ramadoss slams government paddy damage rain PMK Anbumani statement Tamil Nadu 2026 Tamil Nadu paddy procurement issue Thozhupedu Cuddalore paddy damage அன்புமணி ராமதாஸ் எக்ஸ் பதிவு நெல் மூட்டைகள் மழையில் சேதம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026

    காவிரி நீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர மனு..!

    September 18, 2026

    இது முதலீட்டுப் பயணமா இல்லை ஜாலியா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி..!

    September 17, 2026

    சூடுபிடிக்கும் இடைத்தேர்தல்.. அதிகாரப்பூர்வமாக களமிறங்கும் முக்கியக் கட்சிகள்..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Don't Miss

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    வெளிநாட்டு நிகழ்வில் அரசியல் பெரும்புள்ளியுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை வேண்டுமென்றே கலந்துகொண்டு சேட்டை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.