கோவையில் மூத்த குடி மக்களின் ஓய்வு கால வாழ்க்கைக்கான ஒரு புதிய அத்யாயத்தை உருவாக்கியுள்ளது இன்பினியம் ஒன் லைப் எனும் மூத்த குடி மக்களுக்கான குடியிருப்புகளை அறிமுகம் செய்யபட உள்ளது.
மூத்த குடி மக்களுக்கான ப்ரத்யேக குடியிருப்பான இன்பினியம் ஒன் லைப் எனும் குடியிருப்புகளை கோவை வேடபட்டி பகுதியில் அறிமுகம் செய்யபட உள்ளது. வரும் செப்டம்பர் 11, 12, மற்றும் 13 ஆகிய தேதிகளில் அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த குடியிருப்புகள், மூத்த குடி மக்களுக்கான சுதந்திரமான வாழ்க்கை, மருத்துவ வசதி, மற்றும் நல்வாழ்வு, உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு செயல்பட உள்ளது.
AI மார்பிங் விவகாரம்: நடிகை ஸ்ருதிஹாசனுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய நீதிமன்றம்..!
கோவையில் பிரீமியம் குடியிருப்புகளை உருவாக்குவதில் மக்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையும் பெற்றுள்ள இன்ஃபினியம் நிறுவனம், தற்பொழுது மூத்த குடி மக்களுக்கான பிரத்தியேக குடியிருப்புகளை, இன்ஃபினியம் ஒன் லைஃப் என்ற பெயரில் தொடங்கியுள்ளது. இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது அப்பொழுது பேசிய இன்பினியம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் செந்தில் குமார், மற்றும் இயக்குனர் கார்த்திகேயன், கூறியதாவதுஇன்ஃபினியம் ஒன் லைப் குடியிருப்பு கோவை வேடப்பட்டியில் அமைந்துள்ளது.
முதியோர்களுக்கான ஓய்வு கால வாழ்வுக்கான, புதிய பரிணாமத்தை உருவாக்கும், எனவும் ஓய்வு காலத்தில் முதியவர்கள் மற்றவர்களை சார்ந்து இருக்கும் நிலை இல்லாமல், சுதந்திரம், தோழமை, பாதுகாப்பு, மற்றும் மகிழ்ச்சியுடன் வாழக்கூடிய ஒரு வாழ்க்கையாக மாற்றி அமைப்பதையே இந்த குடியிருப்புகள் காட்டுகிறது என்று தெரிவித்தனர். மேற்கு தொடர்ச்சி மலைகள், மற்றும் நொய்யல் ஆற்றுக்கு அருகில் அமைதியான இயற்கை சூழலில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு இரண்டு மற்றும் மூன்று படுக்கையறை கொண்ட இல்லங்களை இந்த குடியிருப்புகள் வழங்குகிறது.
இங்கு குடியிருப்போர் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கவும், தங்களது விருப்பங்களையும், ஆர்வங்களையும் தடையின்றி தொடரவும், புதிய நட்புறவுகளை உருவாக்கவும், இந்த சூழல் உருவாக்கித் தருகின்றது என்று தெரிவித்தனர். குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு, கோவையில் வெளியில், அல்லது வெளிநாடுகளில் வசிப்பவர்கள், தங்களது தாய் தந்தையரை பாதுகாப்புடன் வைத்து கொள்ள, ஒன் லைப் உண்மையான ஒரு உறவை வழங்குகின்றது.
இரவு, பகல், என எந்த நேரத்திலும் பராமரிப்பும், ஆதரவும், உடனடியாக கிடைக்கும் என்பதை அறிந்திருப்பதால், தங்களது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு, மருத்துவ வசதி, அல்லது சமூக தொடர்பில் எந்த சமரசமும், இல்லாமல், சுயமாகவும், சுதந்திரமாகவும் வாழ இந்த ஒன் லைப் குடியிருப்புகள் புதிய தடம் பதிக்கும் என்று தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

