மலையாள சினிமாவில் இளம் நட்சத்திரமாக வலம் வரும் நடிகை மமிதா பைஜூ, தொடர்ச்சியான பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் மூலம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 200 கோடி வசூல் கிளப்பில் இணைந்து சாதனை படைத்துள்ளார். ‘பிரேமலு’ (Premalu) படத்தின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து, இவரது அடுத்தடுத்த திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை புரிந்து வருவது கோலிவுட் மற்றும் மலையாளத் திரையுலகினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, மலையாளத்தைத் தாண்டி தமிழ் சினிமாவிலும் கவனம் ஈர்த்து வரும் மமிதா பைஜூ, குறுகிய காலத்திலேயே தென்னிந்திய அளவில் முன்னணி இளம் நடிகையாக உயர்ந்துள்ளார். தற்பொழுது கோலிவுட்டிலும் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடிப்பதற்கான கதைகளைக் கேட்டு வரும் இவர், தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் நாயகியாகவும் வலம் வருகிறார்.
நானி – கீர்த்தி சுரேஷ் படத்தின் புரோமோவுக்கு இவ்வளவு எதிர்ப்பா? – கலாய்க்கும் நெட்டிசன்கள்..!
இவரது எளிமையான தோற்றமும் துறுதுறுப்பான நடிப்பும் இவருக்குத் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற்றுத் தந்து கொண்டிருக்கிறது. கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் வெளியான ‘பிரேமலு’ திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி உலக அளவில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனையைப் படைத்தது. இப்படத்தில் மமிதா பைஜூவின் நடிப்பு மற்றும் இயல்பான சேட்டை இளைய தலைமுறை ரசிகர்களைக் பெரிதும் கவர்ந்தது.
அதனைத் தொடர்ந்து அவர் நடிக்கும் பிற மொழி மற்றும் மலையாளப் படங்களின் வியாபாரமும் அதிகரித்துள்ளது. மலையாள சினிமா தாண்டி தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி இயக்குநர்களின் விருப்பமான நாயகியாக மமிதா உருவெடுத்துள்ளார். குறுகிய காலக்கட்டத்தில் மிகச்சிறிய வயதிலேயே 200 கோடி வசூல் கிளப்பில் இடம்பிடித்த இளம் தென்னிந்திய நடிகை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

